பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எச்சரித்தார்.[1] போர்க்களத்தில் ஒப்பாரி வைப்பதுண்டா? இலட்சியத்திற்கு எதிராக நடப்பவர்களின் தனிப்பட்ட தன்மைகளைப் பரிசீலித்து பச்சாத்தாபப்படுவதற்கு அது சந்தர்ப்பம் இல்லை என்பது சிவகங்கை சேர்வைக்காரரது கருத்து.

அடுத்து அந்த அணியினர் அபிராமத்துக்கு வடகிழக்கேஉள்ள கொடுமலூருக்குச் சென்றனர். அங்குள்ள கும்பெனியாரது சேகரம் பட்டறையில் இருந்த நெல் இருப்புக்களைக் கொள்ளையிட்டனர். இவ்விதம் கும்பெனியாரது சேகரம்பட்டறைகளில் இருந்து மருதுவின் வீரர்களால் சூறையிடப்பட்ட நெல்லின் அளவு 7339 கலம் 4 மரக்கால்-4, 3/4 படி என்றும், மருதுசேர்வைக்காரர்களது உறவினரான பொன்னளிக்கோட்டை உடையார் சேர்வையும் அவரது குழுவினரும் கொள்ளை கொண்டது 90.85-கலம்-9 மரக்கால் 4, 3/4 படி எனவும் கும்பெனியாரின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.[2] இவை பெரும்பாலும் இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த சிக்கல், முதுகுளத்துார், கமுதி, அபிராமம், வெந்தோணி, ராஜசிங்க மங்கலம், அருநூத்திமங்கலம், அனுமந்தக்குடி, குத்தகை நாடு, ஒருர், கோட்டைப்பட்டினம், புல்லுமாரி ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்டவை எனத் தெரிகிறது.

இன்னொரு ஆவணத்தின்படி கிளர்ச்சிக்காரர்கள் இராம நாதபுரம் சீமையில் 24, 474. ஸ்டார்பக்கோடா பெறுமானமுள்ள தானியங்களையும் ரொக்கத்தையும் கைப்பற்றியதாகவும், சிவகங்கைச் சீமையின் கொள்ளை 12, 413. பக்கோடா பெறுமானம் உள்ளது என்றும் தெரியவருகிறது.[3] இந்த தகவல்களைத்தெரிந்த தளபதி மில்லர் நாகலாபுரத்திலிருந்து திருநெல்வேலிச் சீமையின் கூலிப்படையுடன் இராமநாதபுரம் சீமைக்கு விரைந்தான். அதற்குள்ளாக, கிளர்ச்சிக்காரர்கள் அபிராமம் பகுதியிலிருந்து பரமக்குடி பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் விரைவிலேயே சிவகங்கையிலிருந்து தளபதி மயிலப்பன் அணிக்கு உதவிப் படைகளும் ஆயுதங்களும் தொடர்ந்து வந்து சேர்ந்தன.[4] இராமநாதபுரம்


  1. 30. Ibid vol. 1139 (1802–AD) pp. 46-48.
  2. 31 Madurai District Records, vol. 1132, (14-6-1802) p.25.
  3. 32 Ibid vol. 1142 pp. 41-42.
  4. 33 Revenue Consultations, vol. 107 (1806-1810) p.228.