பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

பரங்கியரும் பாஞ்சாலங்குறிச்சியும்

தமிழ்நாட்டில் விஜயநகர நாயக்கர் ஆட்சியை நிலைநிறுத்திய விசுவநாதநாயக்கர், கோயம்புத்தூரில் இருந்து கன்னியாகுமரி வரையான பரந்த தமிழ் நிலப்பகுதியை இறுக்கமான நிருவாக அமைப்பிற்குள் கொண்டு வந்தார். மதுரை நாயக்கருக்கு எந்தவித அவசர ஆபத்தான, நிலையிலும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்றதாக எழுபத்து இரண்டு பாளையக்காரர்களை நியமனம் செய்தார்.[1] இவர்களில் முப்பத்து இரண்டு பாளையக்காரர் தெற்கே திருநெல்வேலிப் பகுதியில் இருந்தனர். அவைகளில் ஒன்றுதான் பாஞ்சாலங்குறிச்சி என்பதாகும். மிகச்சிறிய பாளையம், போதுமான இயற்கை வளங்கள் இல்லாதது, இந்தப் பாளையத்தின் தலைவராக ஆந்திரமாநிலத்தில் இருந்து வந்து, நாயக்க மன்னரது பணியில் இருந்த கம்பளத்தார். [2]ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது இயற்பெயர் தெரியவில்லை “கெட்டி பொம்மு” என்ற (தெலுங்கு) சிறப்பு பெயரால் அவரும் அவரது வழியினரும் வழங்கப்பட்டனர். தமிழில் அந்தப்பெயர் “கட்ட பொம்மு” ”கட்டபொம்மன்” குலவழிப்பெயராக மாறியது. கட்ட பிரம்மய்யா என இந்தப் பாளையக்காரர்களை சில நூலாசிரியர்களும் குறிப்பிட்டு உள்ளனர்.

மதுரை நாயக்கமன்னர் மரபின் கடைசி வாரிசான ராணி மீனாட்சி கி.பி. 1736ல் இறந்தவுடன், தமிழகத்தின் ஏனைய


  1. 1 Sathianathaier S; History of Madura Nayaks (1924)p.p. 58-60
  2. 2 ஆந்திர நாட்டில் இருந்து தமிழகத்தில் குடியிருந்த ஒன்பது பிரிவினரான வடுகளில் ஒரு பிரிவு. இவர்கள் தொட்டியர் எனவும் வழங்கப்பட்டனர். Edgar Thurstion; Castes and Tribes of South India vol. III. p 92