பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 பாளையக்காரர்களைப் போன்று பாஞ்சைப் பாளையக்காரரும் ஆர்க்காட்டு நவாப்பிற்கு கப்பத் தொகையைச் செலுத்தாமல் கி.பி. 1766 வரை வசதியாக இருந்து வந்தார். ஆனால் நவாப் பிற்காக கும்பெனிப்படைகள், மேஜர் பிலின்ட் தலைமையில் இந்தப் பாளையத்தை தாக்கிப்பிடித்தனர். மீண்டும் கி.பி. 1768ல் பாளையத்தைக் கைப்பற்றி கப்பத்தொகையை வசூலித்தார். இந்தப் பாளையத்தின் தலைவராக கி.பி. 1791ல் நியமிக்கப்பட்ட வர்தான் “வீரபாண்டிய” என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப் பெற்ற “கட்டபொம்மன்”.

இவர் கும்பெனியாரால் சிறைப்பிடிக்கப்பட்டு 16-10-1799ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்பொழுது அவருடன் கைது செய்யப்பட்ட அவரது சகோதரன் ஊமை குமாரசுவாமியும் மற்றவர்களும் பாளையங்கோட்டையில் சிறைப்படுத்தப்பட்டனர்.

ஊமைத்துரையும் அவரது தோழர்களும் 2. 2. 1801ம்தேதி மாலையில் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.[1] அங்கிருந்து முப்பத்து ஐந்து கல் தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு இரவோடு இரவாக ஓடி வந்து சேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து பரங்கிப்படை வந்து சேரும் வாய்ப்பு இருந்ததால் தற்காப்பு போருக்கான எல்லா ஏற்பாடுகளும் உடனே செய்யப்பட்டன. எதிர்பார்த்தபடி பாளையங்கோட்டையிலிருந்து பரங்கிப் படை 6-2-1801 ம்தேதி பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து சேர்ந்தது.

அப்பொழுது அவர்கள் கண்ட காட்சியை அவர்களால் நம்ப இயலவில்லை. கடந்த ஓராண்டுக்கால இடைவெளியில் தரையோடு தரையாக அழித்து நாசம் செய்யப்பட்ட இடத்தில், மீண்டும் பலம் வாய்ந்த கோட்டை ஒன்று எழுப்பப்பட்டு கொத்தளங்களில் 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் காவலாக நின்றனர். அந்தக் கோட்டையின் தோற்றமே அவர்களை கதிகலங்கச் செய்தது. ஆதலால் பரங்கிப்படை வந்தவழியே பாளையங்கோட்டைக்கு 10. 2. 1801 அன்று திரும்பி ஓடியது. பாஞ்சாலங்குறிச்சிக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை துரத்திச் சென்று மிகுந்த சேதத்தை விளைவித்தனர். அத்துடன் பக்கத்தில் உள்ள


  1. 3 குருகுகதாசப் பிள்ளை-திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1931) பக்கம் 263