பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஶ்ரீவைகுண்டம் பகுதிகளையும் ஆக்கிரமித்து அவர்களது கைப்பற்றுதலில் வைத்துக் கொண்டனர்.

"ஆனால் அடுத்த ஒன்றரை மாத அவகாசத்திற்குள் பல இடங்களில் இருந்தும் உதவி பெற்று தங்களைத் தயார் செய்து கொண்ட பரங்கிகள் மீண்டும் 30-3-1801ம்தேதி பாஞ்சாலங்குறிச்சியின் மீது படை எடுத்தனர். இந்தப் படையெடுப்பிற்கு பக்கத்து பாளையமான எட்டையாபுரம் பாளையக்காரர் எல்லாவிதமான ஊழியங்களைச் செய்து வந்தார். ஆனால் பரங்கிகளால் பாஞ்சைக் கோட்டையை நெருங்க இயலவில்லை. ஒவ்வொரு நாள் போரிலும் எத்துணைவிதமான தாக்குதலைத் தொடர்ந்தும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் பரங்கிகள் பக்கம்தான் இருந்து வந்தது! இலங்கையில் இருந்த மலாய் நாட்டு அணியும், கர்நாடக, மலையாளப் படை அணிகளும் பரங்கிகள் உதவிக்கு வரவழைக்கப்பட்டன.[1] என்றாலும், இரண்டு மாதமாகத் தொடர்ந்த அந்த போரின் நிலைபற்றி கவலையடைந்த கும்பெனி மேலிடம் பாஞ்சாலக்குறிச்சியில் உள்ள கும்பெனி அணியின் தலைமையை மாற்றியது. சென்னைக்கோட்டையில் பணியாற்றிய கர்னல் அக்கினியூவை நியமித்தது. அதுவரை பாஞ்சைப்போரில் கும்பெனிப் படைகள் தோல்வியடைந்து நிலை குலைந்திருந்தது.

புதிய தளபதி அக்கினியூம் தமது போர் நடவடிக்கையை 21-5-1801-ல் துவக்கினான். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை உடைத்து அழித்துவிட்டால், எதிரிகளை எளிதில் ஒழித்து விடலாம் என்பது அவனது முடிவு. அவனது திட்டப்பட்டி படபடவென வெடிக்கும் பீரங்கிக் குண்டுகள் தொடர்ந்து கோட்டை மதிலை துளைத்து நொறுக்கின. நான்கு நாட்களில், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை பிய்த்து எறியப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடு போல துயரக்காட்சி அளித்தது. பொதுவாக பேசமுடியாத ஊமத்துரை பரங்கிகளை அழித்து விடுவேன் என சைகையால் சூளுரைத்து, சின்னஞ்சிறு குச்சிகளை எடுத்து தமது உள்ளங்கையில் வைத்து பொடியாக்கி, தலையைச் சுற்றி, வாயினால் ஊதிவிட்டு, அவைகள் பறந்து விழுவதைப்பார்த்து மகிழ்ச்சி கொள்ளும்[2] அவரது


  1. 4 குருகுகதாசப்பிள்ளை திருநெல்வேலி சீமை சரித்திரம் (1931) பக் - 27.8.19
  2. 5 Col. Welish : Military Reminiscences vol. II (1868)