பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

திட்டங்களும் அவர் தோழர்களது எதிர்ப்பு உத்திகளும் நிலை குலைந்தன. வேறு வழியில்லாமல் அதுவரை ஈடுபட்டு இருந்த தற்காப்புப்போர் உத்திகளை மாற்றிக்கொண்டு, பரங்கிகளுடன் நேருக்குநேர் பொருதினர்.

புறநானூற்றுப் பாடல்களை நினைவுப்படுத்தும் வண்ணம் பாஞ்சை மறவர்கள் புறமுதுகு இடாது வீரத்துடன் போரிட்டு மடிந்தனர். ஏகாதிபத்திய வெறியர்களான பரங்கிகளது அழிவுப் படைகள், வெடிகுண்டுகள் தங்களது புனித மண்ணில் புதைந்து பழி சேர்க்கக்கூடாது என்பதற்காக அவைகளைத் தங்களது பரந்த நெஞ்சங்களில் தாங்கியவர்களாக மடிந்து சாய்ந்தனர். அவர்களது வீரமும் மானமும் விடுதலை இயக்க வரலாற்று பள்ளாக காலமெல்லாம் ஒலிக்கும் என்பது உறுதி.

பாஞ்சாலங்குறிச்சிப் போரில், பரங்கிகளது அணியில் பங்கு கொண்ட கர்னல் வெல்ஷ், அந்தப்போரின் காட்சிகளை, வேதனை யும், வியப்பும் விரவிய வார்த்தைகளால் தமது நாட்குறிப்புக்களில் பதிவு செய்துள்ளார். பதினெட்டு பக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும் அவரது குறிப்புகள் வரலாற்று நோக்கில் சிறப்புடையனவாக விளங்குகின்றன. மாற்று அணியைச் சேர்ந்தவரானாலும் உண்மையான வீரத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து விருப்பு வெறுப்பு இல்லாமல், விவேகத்துடன் புகழ்ந்து, தொடுத்த அஞ்சலிபோல அமைந்துள்ளது அவரது சொற்கள். 24-5-1801ம் தேதி, உச்சி வேளைக்குப் பின்னர் உயர்ந்து நின்ற ஆதவன், மேற்கு நோக்கி தாழ்ந்ததுபோல போரின் எதிர்ப்பு வேகம் தணிந்தது. நான்கு மாதங்களாக நிமிர்ந்து நின்ற பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தது. வீரர்கள் சாய்ந்தனர். அந்த இறுதிப் போர்க்காட்சியை கர்னல் வெல்ஷின் ஆங்கிலச்சொற்கள் இவ்விதம் சித்திரிக்கின்றன.[1]

... ... ... ... வெற்றியைக் காணாத அந்த தாக்குதலில் அதுவரை மோசமாக பாதிக்கப்பட்டு இருந்த நமக்கு, நரிப்பள்ளம்[2]


  1. 6. Ibid vo1. II
  2. *நரிப்பள்ளம் - பரந்த ஆற்று மணல்படுகையில் வரிகள் இரவு நேரத்தில் தங்குவதற்கு மணலைக் கால்களினால் வாரி அமைக்கும் பள்ளங்கள்.