பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

போன்று கோட்டையின் உட்பகுதியை முதன் முறையாகக் கண்ட பொழுது உள்ளத்திற்கு ஆறுதலாக இருந்தது. இதனைக் கைப்பற்றுவதற்காக ஏற்கனவே பல முறை முயற்சித்தது உண்டு. அந்த இடம் தரைமட்டத்திற்கு கீழே, மூவாயிரம் வீரர்கள் சில சமயங்களில் ஆபத்து மிகுந்த வேளையில் அவர்களது குடும்பத்தினரும், தற்காப்பாக தங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு இருந்தது, வியப்பாகத் தோன்றியது. எதிரிகளது துப்பாக்கி, பீரங்கி குண்டுகளது தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்தக்கோட்டையின் பல பகுதிகளிலும், இத்தகைய பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தன ... ... ... ... இந்தப் பள்ளங்களில் உள்ளவர்கள் பயன்படுத்திய நீண்ட ஈட்டிகள், நல்ல பலனைத் தந்தன. அந்தப்பகுதியை அடைந்த எந்த எதிரியும் உடனே குத்திக் கொல்லப்பட்டதில் ஆச்சரியமில்லை. அங்கு அவர்கள் பதுங்கி இருக்கும் வரை எதிரிகள் யாரும் நெருங்கிச் செல்லமுடியாது. ஆனால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதனை உணரமுடியும். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தற்காப்பு முறையை அங்கு அமைத்த பொறியாளரைப் போற்றாமல் இருக்க முடியாது. அந்தக் கோட்டை மதில் மட்டும் இன்னும் சற்று உறுதியாக இருந்து தற்காப்பிற்கு துப்பாக்கி யையும் சனியன்களையும் பயன்படுத்தி இருந்தால், நாம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அந்தக்கோட்டை முன்னே காத்துக் கொண்டிருக்க வேண்டியதாகிவிடும் ... ... ... ... "[1]

பஞ்சாலங்குறிச்சி 24-5-1801 அன்று வீழ்ந்தது. அதனைக் குறிப்பிட்டுள்ள "திருநெல்வேலி சீமை சரித்திர" ஆசிரியர், " ... ... ... பிடிபட்ட கோட்டைக்குள் பிரவேசித்த கும்பெனியாரின் ராணுவ அலுவலர்கள் அதன் சிறுமையைக் கண்டு அலட்சியமடைந்தனர். ஆனால் அதன் வலுவையும், அதனைக் கட்டி முடித்த கண்ணிமைப் பொழுதினையொத்த இந்திரசால நொடியின் அளவையும், எதிரிகளின் மாயாவினோத திறமை, சாமர்த் தியத்தையும் அவர்கள் பிரயோகித்த ஆயுத முறைகளின் தேர்ச்சியையும் கண்டு பிரமித்துப் போய்விட்டனர்.’’ என வெற்றிப் படைத்தலைவர்களது மனப்பான்மையைத் தெளிவாகச் சுட்டியுள்-


  1. 7 Col. Welsh: Military Reminiscences (1830) vol. I p.p. 132-33.,