பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பெற்று வந்த தாக்குதலில் ஈடுபட்டு இருந்த சின்னமருது சேர்வைக்காரர், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை விழுந்த தகவல் வந்தவுடன் சிவகங்கைக்குப் போய்விட்டதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது, என்றாலும் அங்கிருந்த கிளர்ச்சிக்காரர்கள் அவரை அன்புடனும், மரியாதையுடனும் வரவேற்று தக்க பாதுகாப்புடன் அவரை அரண்மனை சிறுவயலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரச மரியாதைகள் காத்திருப்பது அவருக்கு தெரியாதல்லவா?

சின்னமருது சேர்வைக்காரரது குடும்பத்தினரும் அவரது மக்களது குடும்பங்களும் அரமண்மனை சிறுவயலில் வாழ்ந்து வந்தனர். அந்த ஊரின் எல்லையை அடைந்த ஊமைத்துரையை பல்லக்கில் அமரச் செய்து சின்னமருது சேர்வைக்காாது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். கூடியிருந்த தாய்க்குலத்தினர் குளவை இட்டு அந்த வீர விருந்தாளியை வரவேற்றனர். சிறிது நேரத்தில் ஐநூறு சக்கரம்[1] பணம்[2] வசூலித்து ஊமைத்துரையின் உடல்நலத்திற்காக ஏழை எளியவர்களுக்குதானமாக வழங்கினர்.[3]வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரப்போரிட்டு மரணப் பிடியில் இருந்து உயிர் தப்பிய விந்தை மனிதர் அல்லவா? அவர் சிவகங்கைச்சீமை மக்களது அன்பும் விருந்தோம்பலும் கண்டு மனம் நெகிழ்ந்து காணப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஒரு உன்னதமான தாய் காப்பாற்றியதையும் தொடர்ந்து தம்மைக் கரிசனத்துடன் பேணிக் காப்பதற்கு பல தாய்மார்கள் சிவகங்கைச் சிமையில் இருப்பதையும் எண்ணி எண்ணி ஊமைத்துரை உள்ளம் நெகிழ்ந்தது. அவரது உடலில் இருந்த ஆறு மான காயங்களும் அப்பொழுதே ஆறிவிட்டது போன்ற பிரமை, தெம்பு, அவருக்கு. தமக்கு புகலிடம் கொடுத்து, தாளாத அன்பினைச் சொரிந்து ஆதரவு நல்கும் அந்தத் தாய்மார்களைப் பாராட்டிச் சொல்வதற்கு தமக்குப் பேச்சுத்திறன் இல்லையே என்ற கவலையை ஊமையான அவரது கண்களில் இருந்து வழிந்த கண்ணிரின் கனிவான பார்வை பிரதிபலித்தது.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கும்பெனியாரது பீரங்கிகள் புடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தபொழுது கிளர்ச்சிக்


  1. 12 Military Consultations, voI. 285 (A) 11 -6-1801 p. 505-52
  2. * மறவர் சமையில் அப்பொழுது செலாவணியில் இருந்த வெள்ளிபணம்
  3. 13 Ibid vol. 284, 26-5-1801 p. 4040-41