பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

காரர்கள் இராமநாதபுரம் சீமையின் தென்பகுதியில் கமுதிக் கோட்டையில் நிலைகொண்டிருந்த கும்பெனியாரைத் தாக்கி நெருக்கிக் கொண்டு இருந்தனர். இந்தத் தாக்குதல் சிவகங்கைப் பிரதானியின் நேரிடையான ஆணைப்படி நடந்து வந்தது. மருதுசேர்வைக்காரர் மக்களும், காடல்குடி பாளையக்காரரரும் மும்முரமுமாக கோட்டை முற்றுகையில் ஈடுபட்டனர். ஓராயிரம் மறவர்கள் கும்பெனித் தளபதி மார்ட்டின்ஸ் அணிகள் மிகவும் கடுமையாக நெருக்கப்பட்டு அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர்.[1] எந்த நிமிடத்திலும் கும்பெனியாரது தோல்வி எதிர்பார்க்கப்பட்டது. அந்தநிலையில் பாஞ்சாலங்குறிச்சிப்போரில் கும்பெனியாருக்கு ஏற்பட்டுள்ள சாதகமான போக்கும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விரைவில் பரங்கிகள் கையில் விழுந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள செய்தியைக் கொண்டுவந்த தூதுவர்களை சின்னமருது சேர்வைக்காரரிடம் சேர்ப்பித்தனர். பாஞ்சாலங்குறிச்சிப் போரின் தோல்விக்குப்பிறகு கமுதிக் கோட்டைப்போரினைத் தொடர்ந்து கொண்டிருப்பதில் மேலும் காலம் வீணாகலாமே தவிர, வெற்றி பெற்றுள்ள பரங்கியர் விரைவில் கமுதிக்கும் சிவகங்கைச் சீமைக்கும் வந்து விடுவது திண்ணம் என்பதை உடனே சின்னமருது சேர்வைக்காரர் உணர்ந் தார். பரங்கிகளுடன் பொருதும் அடுத்த இறுதிப்போர்க்களம் காளையார் கோவில் கோட்டைதான் என்பதையும் அவர் அப்பொழுது தீர்மானித்துவிட்டார். அதற்கான ஆயத்தங்களை உடனடியாகச் செய்வதற்காக சின்னமருது சேர்வைக்காரர் சிவகங்கைக்கு விரைந்தார்.

சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களின் ஒரு பிரிவினர் இராமநாதபுரம் அரசர் பட்டத்திற்கு மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரை நியமனம் செய்து ஆர்ப்பரித்தனர்.[2] அடுத்து அவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சிவகங்கைச் சீமையின் தற்காப்பு நிலையாக கும்பெனியாரது ஆக்கிரமிப்பில் இருந்த திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்த கும்பெனியாரின் கூலிப்பட்டாளத்தைத் தூரத்தி அடித்தனர். அதேபோல தொடர்ந்து சென்று, நத்தம், கிராமத்தையும் கைப்பற்றி அங்கிருந்த கும்பெனிப்பட்டாளம் மதுரைக்கு ஓட்டம்பிடிக்குமாறு செய்தனர்.[3] அவர்களைப்


  1. 14 Military Consultations vol. 289 (1-12-1801) p. 7680
  2. 1 5 Ibid vol. 284, (1-6-1801) p. 3870
  3. 16 Ibid vol. 285, (7-7-1801) pp. 547-48