பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பின் தொடர்ந்து தெற்கே சென்று மேலுரையும் திருமோகூரையும் கைப்பற்றினர். இந்த இரு கோட்டைகளில் இருப்பில் இருந்த ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அவர்களது கைகளில் சிக்கின.[1]

கிளர்ச்சிக்காரர்களின் பிற பிரிவுகளும் பரங்கிகளது வலுவான நிலைகளைப் பலவீனப்படுத்துவதில் முனைந்து இருந்ததால் இராமநாதபுரம் சீமையின் வடகிழக்குப் பகுதியான குத்தகை நாட்டில்[2] தங்கள் கைவரிசையைக் காட்டினர். இராமநாதபுரம் அமில்தாாது அறிக்கைப்படி சிவகங்கையில் இருந்து வந்த அணியொன்று குத்தகை நாட்டைக் கொள்ளையிட்டது என்றும் உஞ்சனையில் [3]இருந்த கும்பெனி அணியுடன் பொருதி அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு, இருப்பில் இருந்த மிகவும் அதிகமான அளவு வெடிமருந்தினைக் கைப்பற்றி, தொண்டிக்கு எடுத்துச் சென்றனர். பீதியுற்ற மக்களது அச்சத்தை நீக்குவதற்கு கும்பெனியாரது இரு அணிகள் தேவை என்பதையும் அவரது கடிதங்கள் தெரிவித்தன.[4] அப்பொழுது கிளர்ச்சிக்காரர்கள், இலங்கையில் இருந்து ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொதிகளையும் படகுகள் மூலம் பெறுவதற்கு தொண்டி துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர்.[5]

கிளர்ச்சிக்காரர்கள் எதிர்பார்த்தபடி பாஞ்சை கோட்டைப் போரை முடித்த பரங்கியர் கமுதிக்கு வரவில்லை. அவர்களில் ஒரு அணி கர்னல் அக்கினியூ தலைமையில் பள்ளிமடம் சென்றது. அப்பொழுது அவருக்கு இராமநாதபுரம் சீமையின் நடப்பு விவரம் தெரியாதவகையில் செய்திப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு


  1. 17 Madurai District Records, vol. 1182. (9-5-1801)p.p. 149-51.
  2. *இராமநாதபுரம் மன்னரது பதினேழு மாகாணங்களில் ஒன்று இன்றைய திருவாடனை தேவகோட்டை வட்டங்களைக் கொண்டது.
  3. காரைக்குடி-தேவகோட்டை சாலையில் அமராவதி புதுருக்கு கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள ஊர்.
  4. 18 Military Consultations vol. 288, (20-10-1801), pp. 1657
  5. 19 Ibid, vol 284, 30-5-1801. pp. 420-30