பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மேலும், கிளர்ச்சிக்காரர்கள் கும்பெனியாரது தானியங்களுக்கு சேதம் உண்டாக்கி இருப்பதையும், கும்பெனியார் பெற வேண்டிய ஜூன் மாத கிஸ்தியையும் அவர்களே வசூலித்துக் கொண்டு போய் விட்டனர் என்றும், பக்கத்தில் உள்ள ஐந்து ஊர்களையும் கொளுத்தி சாம்பல் ஆக்கிவிட்டனர் என்றும், இதற்கு முதன்மையான காரணம் அபிராமம் குடிகள் கும்பெனியாரது கால்நடை, குதிரைகளுக்கு வைக்கோலும், இதர தீனியும் அளித்து உதவியிருப்பது என்றும் கர்னல் அக்னியூவுக்கு அனுப்பியுள்ள இன்னொரு கடிதத்தில் கலெக்டர் தெரிவித்து இருந்தார்.[1]

கிளர்ச்சிக்காரர்களது வெறுப்பு அபிராமம் அழிமானத்துடன் அமைதி பெறவில்லை. அவர்கள் மீண்டும் கமுதிக்கு சென்றனர். அங்குள்ள கும்பெனியாரது கச்சேரிக்கும் தீ வைத்து அழித்தனர். கோயிலை ஒட்டிய குடியிருப்பு ஒன்றுக்கும் தீ பரவியது. இந்த நெருப்பில் சிக்கி இரு குழந்தைகள் மாண்டது பரிதாபமாக இருந்தது. அத்துடன் கும்பெனியாரது தானியக்கிடங்கில் இருந்த ஆறாயிரம் கலம் நெல்லும் அழிந்து நாசமாகியது. இந்தத் தாக்குதலில் மருதுசேர்வைக்காரர் மக்களுடன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் சிவத்தையாவும் கலந்து கொண்டார்.[2]கிளர்ச்சிக் காரர்கள் பள்ளிமடம் சென்று தங்கினர்.

கிளர்ச்சிக்காரர்களது இத்தகைய அழிமானங்கள் மேலும் ஏற்படாது இருக்க கர்னல் அக்கினியூ திருச்சுழியல் கோவிலைச் சுற்றி மணல் மூட்டைகளைக் கொண்டு அரண் அமைக்க உத்திரவிட்டான்.[3] ஏனெனில் அப்பொழுது பள்ளிக்குடி, பள்ளிமடம் ஆகிய ஊர்களில் திரண்டுள்ள கிளர்ச்சிக்காரர்கள் அடுத்து திருச் சுழியலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.[4]

கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் கைவரிசையை இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைகளில் காட்டியதுடன் அமையாமல் தங்களது


  1. 22 Madurai District Records, vol. 1182,23-6-1801 p p. 209-210,
  2. 23 Ibid (30-6-1801) p. 218.
  3. 24 льid (19-5—1801) (25-5-1801) p, 155-58
  4. 25 Madurai District Records, vol. 1134, (29-5-1801.)