பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

உயிர் உடமைகள் அழிவு, போர் தொடரும் காலஅளவு, சூழ்நிலை, அப்பொழுது கிளர்ச்சியினை நசுக்க கும்பெனித்தரப்பில் தேவைப்படும் ஆட்கள், வெடிமருந்து, தளவாடங்கள்: வாகனங்கள், உணவுப்பொருள், பணம் என்ற பல வேறு தொடர்புடையவைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தான். போரில் பொருதி வெற்றி பெறுவது, அதற்குத் தகுதியான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்பன போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் கைக்கொள்ளும் இயல்பான நடவடிக்கைகள், ஆனால் அந்த முயற்சியில் ஒருவரைவிட மற்றவர் மட்டும், எவ்விதம் விரைவாக எளிதாக வெற்றியைப் பெறுவது என்பது போர்த் தந்திரமாகும்.

இத்தகைய நிலையில், சரியான முடிவு ஒன்றிற்கு வருவதற்கு முன்னர், இராமநாதபுரம் சீமையின் நிலையை நேரில் அறிந்து கொள்வது அவசியமானது என அக்கினியூ விரும்பினான். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து கமுதி வழியாக இராமநாதபுரம் அடைவதுதான் சரியான வழி என்றாலும் கமுதி, பாப்பாங்குளம், மண்டலமாணிக்கம் பகுதிகளில் கிளர்ச்சிக் காரர்களது நிலை வலுவாக இருந்ததால், அக்கினியூ பள்ளி மடம் வழியாக 1-6-1801ம் தேதி திருப்பூவனம் போய்ச் சேர்ந் தான். அங்கும் கிளர்ச்சிக்காரர்கள் குழுமி இருந்தனர். இராமநாதபுரம் நோக்கிச் செல்லும் அவனது பயணத்திற்கு இடையூறாக அவர்கள் இருந்தனர். இதனால் கும்பெனி அணிக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் கடுமையான கலகலப்பு ஏற்பட்டது. மதுரைக் கோட்டையில் இருந்து மேஜர் கிரகாம் என்பவன் தலைமையில் அணி யொன்றும் திருப்பூவனம் வந்து சேர்ந்தது. கிளர்ச்சிக்காரர்களது கடுமையான தாக்குதலுக்கு இலக்காகிய இந்த அணித்தலைவன் கிரகாம், மேஜர் ஷெப்பர்டு என்பவனது அரிய முயற்சியால் உயிர் தப்பினான். [1]கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம் இருந்தது. தொடர்ந்து பயணம் மேற்கொண்ட அக்கினியூவின் அணியை, திருப்பாச்சேத்தி அருகிலும் கிளர்ச்சிக்காரர்கள் பொருத்தினர். 8-6-1801ம் தேதி அன்று நடைபெற்ற போரில் எழுபது கிளர்ச்சிக்காரர்கள் தியாகிகளாயினர்.[2] தொடர்ந்து வழி நெடுகி

  1. 29 Ibid vol. 285, (21-6-1801) pp. 4550-55
  2. 30 bid. vol.,285 (A) (18-6-1801) pp. 4965-80