பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

லும், பல இடங்களில் பரங்கிகளை கிளர்ச்சிக்காரர்களை வழி மறித்தனர். இருதரப்பினருக்கும் மிகுதியான உயிர் இழப்பு ஏற்பட்டது. என்றாலும், அக்கினியூவும் அவனது குழுவினரும் கிளர்ச்சிக்காரர் கண்களில் மண்ணைத் துவிவிட்டு, தந்திரமாக இராம நாதபுரம் கோட்டை போய்ச் சேர்ந்தனர். அங்கிருந்து கொண்டு கர்னல் அக்கினியூ, சென்னையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்தான்.[1] அதில் தமக்கு சாதகமான இராமநாதபுரம் சீமைப்பகுதியில் இருந்து சிவகங்கைச்சீமை மீது போர் தொடுத்தால், தேவையான உணவுப் பொருட்களையும் ராணுவ சாதனங்களையும் எளிதில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றதாக இருக்குமென்று எண்ணியதாகவும், ஆனால் இராமநாதபுரம் சீமைக்கு நேரில் சென்று நிலமையை நேரில் ஆய்வு செய்தபிறகு தமது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தான். காரணம், இராமநாதபுரம் சீமை வடக்குப்பகுதி முழுவதும் கும்பெனியாரை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சிக்காரர்கள் கையில் இருந்து வந்தது. அதனால் அப்பொழுது காளையார்கோவில் எல்லையில், ஒரிடத்தில் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேமித்து வைப்பது மிகவும் அவசரமாகி உள்ளது என்றும் வலியுறுத்தி இருந்தான். கி.பி. 1789ல் மருதுசேர்வைக் காரர்களை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட கர்னல் ஸ்டுவர்டிற்கு ஏற்பட்ட அவதிகளையும் அவர் சந்தித்த கடுமையான அனுபவங்களில் இருந்து இந்தக்கருத்தை வலியுறுத்துவதாக, பழைய முந்தைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி இருந்தான்.

அத்துடன் அன்றைய நிலை மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும், சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் மன்னிப்பு பெற முடியாத அளவிற்கு கும்பெனித்துரைத்தனத்தை இக்கட்டான நிலையொன்றில் இருத்தி வைத்துள்ளனர் என்றும், அதிருப்தி அடைந்துள்ள அனைத்துப் பகுதியினரையும், தமது அணியில் சேர்த்து வைத்து இருப்பதுடன், பாளையக்காரர்களையும், குடி களையும் கொடுமைப்படுத்தி தங்களுக்கு இணக்கமானவர்களாக மாற்றி வைத்துக் கொண்டு இருப்பதாகவும் புதுக்கோட்டைத் தொண்டமான் கூட அவர்களுடன் சேர்ந்து கொள்ளுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் விளக்கி இருந்தான். நமது கோட்-

  1. 31 Ibid vol. 285 (A), (18-6-1801), pp. 4965-80