பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

டைக்கு அப்பாலுள்ள அனைத்து குடிகளும் ஆயுதம் ஏந்தியவர்களாக நமக்கு எதிரியாக உள்ளனர். ஆதலால் இந்தக் கடினமான சூழ்நிலையில், சுதேசி வீரர்களைச் சார்ந்து இருக்காமல் கும்பெனியாரது பரங்கி வீரர்களது அணிகளையும் குதிரைப் படையணிகளையும் மட்டும் நம்பி, நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கிறது, என்பதையும் துலக்கமாகக் குறிப்பிட்டு இருந்தான்.[1]

இருபது நாட்கள் இராமநாதபுரம் கோட்டையில் தங்கி இருந்து அரிய துப்புகளைச் சேகரித்து திரும்பிய பின்னர், மதுரையில் இருந்து மற்றொரு அறிக்கையினையும் கர்னல் அக்கினியூ சென்னைக்கு அனுப்பி வைத்தான்.[2] இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், மருது சேர்வைக்காரர்களை தண்டிக்க வேண்டிய அவசியம், கலெக்டர் லூவிங்டன் அளித்த சிவகங்கையின் சுருக்கமான வரலாறு. சிவகங்கை அரசவழியினரான படை மாத்தூர் ஒய்யாத்தேவன் தொண்டமான் சீமையில், மருது சேர்வைக்காரர்களுக்கு அஞ்சி வாழ்ந்து வருவது, சிவகங்கைச்சீமையின் இன்னொரு வாரிசான வேங்கன் உடையாத்தேவர் ராணி வேலுநாச்சியரது மகள் வெள்ளச்சியை மணந்து அவர் இறந்த பிறகு, பெரியமருதுவின் மகளை மணந்து அவர்களுடன் வாழ்ந்து வருவது ஆகிய விவரங்களை விரிவாக வரைந்து அனுப்பியதுடன், சிவகங்கைச்சீமையின் அதிகார பூர்வமான ஜமீந்தாராக படை மாத்துார் ஒய்யாத்தேவரைக் கும்பெனியார் அங்கீகரிப்பது பற்றியும் பரிந்துரைத்து இருந்தான்.[3]

ஒய்யாத்தேவர், ஏற்கனவே சிவகங்கை மக்களுக்கு சிவகங்கையின் வாரிசு என அறிமுகப்படுத்தப்பட்டார். மக்களது மரியாதைக்குரியவராகவும், இளவரசி வெள்ளச்சியை மணந்து கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். சிவகங்கை சேர்வைக்


  1. 32 Revenue Sundries vol. 26 (18-6-1801) p. 598 Military Consultations, 285 (A) 18-6-1801 pp. 4965-79
  2. 33 Ibid 25-6-1801
  3. 34 Ibid, 25-6-1801. pp. 4333-37