பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்.[1] அதுவரை சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தமக்கு ஏற்படுத்திய இன்னல்களை அடிபட்ட பாம்பு போல் சகித்துக் கொண்டு அறந்தாங்கியில் வாழ்ந்த படைமாத்துார் தேவருக்கு சிவகங்கை ஆட்சியாளர்களைப் பழிவாங்குவதற்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

இத்துடன் தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்த சிவ கங்கைச் சீமை எங்கும் பிரசித்தம் செய்வதற்காக கும்பெனியார், பொது அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டனர். அந்த அறிவிப்பில்[2]

ஆர்க்காட்டு நவாப் வாலாஜா முகம்மது அலியுடன் கையெழுத்து இட்டுள்ள 12-7-1792ந்தேதிய உடன்பாட்டின் மூலம் தென்னகத்தின் பாளையக்காரர் (சிவகங்கை ஜமீன்தார் உட்பட்ட) அனைவரது கப்பத்தொகையை நிர்ணயித்து வசூலித்து வகைப்படுத்தும் உரிமையைக் கும்பெனியார் பெற்று இருப்பதையும், அதனால் சிவகங்கைப் பாளையத்திலிருந்தும் கப்பத்தொகையைப் பெற தகுதி பெற்று இருப்பதையும் தெரியப்படுத்துகின்றனர். ஆனால் நாலுகோட்டை பாளையத்தின் பணியாளர்களான வெள்ளை மருதுவும் சின்னமருதுவும், தங்கள் சூழ்ச்சியினால் இந்த உரிமைகளும் அதிகாரங்களும் தடைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தச் சீமையின் அரசியல் தலைவர் ஒரு பெண்ணாக இருந்த தால், அவர்கள் அந்த அரசின் அமைச்சர்களாகத் தங்களை நியமித்துக் கொண்டு அந்த அரசியார் மீதும் குடிமக்கள் அனைவர் மீதும் தங்களது பிடிப்பையும் சர்வாதிகாரத்தையும் நிலைநிறுத்தி வந்தனர்.

"நாலுகோட்டை பரம்பரையின் கடைசி வாரிசு இறந்த பிறகு வெள்ளைமருதுவும், சின்னமருதுவும் அடக்குமுறையினால் அரசியலை நடத்தி வந்தனர். இப்பொழுது கும்பெனியார் படைகளுடன் நேரடியான மோதல்களை ஏற்படுத்தி, சிவகங்கைச் சீமையைத் தவறான வழியில் அழிவிலும் நாசத்திலும் இட்டுச்


  1. 39 Ibid vol. 285 (A) (6-7-1801), pp. 4977-74
  2. 40 Revenue Sundries, vol. 26, (6-7-1801), pp. 432-48 Revenue Consultations vol. 110 (6-7-1801), pp. 1299–1365