பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7 சராக இருக்கும் சர்ச்சிலைத் தெரியுமல்லவா ? அவருடைய மாளிகைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு போ!" என்றான், வேதாளம் சற்று யோசித்தது.

   "என்ன யோசிக்கிறாய் ?” என்று கோபாலன் சுருட்டுக்கட்டு  வை த் தி ரு ந் த கையை அந்த வேதாளத்தை அடிக்க ஓங்கினான். உடனே வேதாளம், 
   "ஓகோ ! அந்தச் சுருட்டுக் குடிக்கும் சர்ச்சில் துரையா ? சரி சரி ! இதோ போய்விடுவோம்" என்று கூறிக்கொண்டே கோபாலனைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டது. விர்ரென்று காற்றில் பறந்தது. மே க ம ண் ட ல த்  தை யெல்லாம் கடந்துகொண்டு அரைமணி நேரத்தில் தேம்ஸ் நதி பாயும் இலண்டன் பட்டணம் வந்து விட்டது. சர்ச்சில் மாளிகையின் உள் வாசலில் கொண்டு போய் கோபாலனை இறக்கி விட்டு, அ வ ன்  கை  யை ப் பிடித்துக்கொண்டே அவருடைய தனி அறைக்கு அழைத்துச் சென்றது. அப் போது ஆணரபிள் மிஸ்டர் சர்ச்சில் அவர்கள் சுருட்டுப் பிடித்துக்கொண்டு ஏதோ கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுபவர் போல யோசித்துக் கொண்டிருந்தார். அவர் எதிரிலே கோபாலன் சென்று நின்று கொண்டு 
   "குட் ஈவினிங் மிஸ்டர் சர்ச்சில் ! இதோ உங்களுக்காகக் கொண்டு வந்த இந்தியா சுருட்டு" என்று தன் அன்பளிப்பைக் கொடுத் தான். திடீரென்று யோசனை கலந்ததால், பொங்கி வரும் கோபத்தோடு கோபாலனை ஒரு பார்வை பார்த்தார் மிஸ்டர் சர்ச்சில் !
  "யாரிது நான்சென்ஸ் ? சிறுவனே ! என் தனி அறைக் குள் நீ எப்படி வந்தாய் ? என் சிந்தனையைக் கலைத்து ஏன் இடைஞ்சல் செய்கிறாய். போ வெளியே !"
   "மேன்மை சான்ற சர்ச்சில் அவர்களே ! ஆறாயிரம்

மைலுக்கப்பால் உள்ள இந்தியாவிலிருந்து அ வ ச ர மா க உங்களைப் பார்க்கப் புறப்பட்டு வந்தேன். வரவேற்பளிக்க