பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9 அப்படியே வேதாளத்தைக் கூப்பிட்டு, என்னைத் தூக்கிச் செல் ' என்றான்.

    "எங்கே தூக்கிச் செல்ல வேண்டும் ?" என்று வேதாளம் கேட்டது.
    "இரு யோசிக்கிறேன்"எ ன் று சொல்லிவிட்டுத் தலையை மேலே தூக்கி உச்சியில் பார்த்தபடி இருந்தான். அதற்குள்ளே சர்ச்சில் அவர்களின் மெய்க்காப்பாளர் இருவர் அங்கே வந்துவிட்டனர்.
     "பையா உன்னத் தூக்கிச்செல்ல இதோ ஆட்கள் வந்துவிட்டனர் புறப்படு, பிறகு யோசிக்கலாம்" என்று அவர் சொல்லிவாய் மூடுமுன் கோபாலனைத் தூக்கிக்கொண்டு வேதாளம் கிளம்பியது.

சர்ச்சிலுக்கோ, அவருடைய மெய்க்காப்பாளர்களுக்கோ வேதாளம் கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. அத னால்தான் அவர்கள், இதென்னடா பையன் பறக்கிறான் என்று அண்ணாந்து பார்த்து அதிசயித்திருக்கிறார்கள். வேதாளம் கோ பா ல னை த் தூக்கிக்கொண்டு பறக்கும் பாதையிலே ஒரு பெரிய பொட்டல் இருப்பதைக் கண்டான். வேதாளத்திடம் அந்தப்பொட்டலில் இறக்கும்படி கோபாலன் கூறினான், வேதாளம் நேரே அந்தப் பொட்டலில் இறங்கியது. இறங்கும்பொழுதே அங்கு பல பறவைக் கப்பல்கள் வரிசை யாக நிற்பதைக் கோபாலன் பார்த்தான். அது பறவைக் கப்பல் இறங்கும் இடம்தான். கல்கத்தா நகரில் உள்ள டம் டம் ’’ திடல் தான் அது. கோபாலன் கீழே இறங்கும்போது, பல மனிதர்கள் ஓடி வந்தனர். அவர்கள், கோபாலன் ஏதோ ஒரு பறவைக் கப்பலிலிருந்து குதித்து வருகிறான் என்று எண் ணியிருக்க வேண்டும். அவர்கள் கண்ணுக்கும் வேதாளம் தெரியவில்லை. கோபாலன் கீழே இறங்கி நின்றவுடன், அரு கிலே ஓடிவந்த வி மா னி ஒ ரு வ ர் அவனை அணுகிவந்து