பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1O

" காயம் ஒன்றும் இல்லையே" என்று விசாரித்தார். அவரு டைய கேள்வியின் பொருள் விளங்காமல் அவன் திருதிரு வென்று விழித்தான். " எந்தப் பறவைக் கப்பலில் நீ, சென்றாய் ? குடையில் லாமல் எப்படி இறங்கினாய் ?’ என்றெல்லாம் அந்த விமானி கேட்கக் கேட்க அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான் கடை சியாக, நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று விமானி கேட்டார்.

   " நான் இலண்டனிலிருந்து வருகிறேன். இது எந்த ஊர் ? என்றான் கோபாலன்.
   " இது கல்கத்தா, அது சரி. இலண்டனிலிருந்து எதன் மூலம் வருகிறாய் ? ’’
 " இதோ இந்த வேதாளம் தூக்கிக்கொண்டு வந்தது" என்று வேதாளம் இருந்த பக்கம் கையைக் காட்டினான். எல் லோரும் அவன் கைகாட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஒன்றும் தெரியவில்லை. விமானி மறுபடியும் 
    "வேதாளம் என்று எதைச்சொல்கிறாய் ?’ என்று கேட்டார்.


 "இதோ இதைத்தான்"என்று மறுபடியும் கைகாட்டி னான். அந்தத் திசையில் அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.

அவர்கள் தன்னை நம்பவில்லை என்பதைக் கோபாலன் புரிந்துகொண்டான். உடனே வேதாளத்தை நோக்கி

   "என்னைத் தூக்கிக் கொண்டு இந்தத் திடலை ஒரு சுற்றுச் சுற்று" என்று கட்டளை யிட்டான். உடனே வேதாளம் அவன் கட்ட ளையை நிறைவேற்றியது. திடலிலே மக்கள் திரளாகக் கூடி விட்டார்கள்.

கப்பலில்லாமல், சிறகில்லாமல் காற்றிலே பறக்கும் அதி சயச் சிறுவனைப் பற்றிய செய்தி நகரெங்கும் பரவி விட்டது.