பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 11

மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த வேடிக்கையைக் காண பறவைக் கப்பல் இறங்கும் டம்டம்  திடலுக்கு வந்து கூடி விட்டனர்.
   கோபாலனை, ஒரு சுற்றுச் சுற்றியவுடன் வேதாளம் மறுபடி கீழே இறக்கிவிட்டது. அந்த விமானி அருகில் வந்தார். சிறுவனே நீ இப்பொழுது எப்படிப் பறந்தாய் ?’ என்று கேட்டார்.
    "என்னுடைய அடிமையாக விளங்கும் வேதாளம் என் னைத் தூக்கிக்கொண்டு பறந்தது" என்று சொன்னான்.
    "இன்னும் வேறு என்ன செயல்கள் உன்னால் செய்ய முடியும் ?’ என்று அந்த விமானி கேட்டார். 
   "வேண்டி யதை வேண்டியபடி செய்யலாம். இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும் ?. என்று கேட்டான் கோபாலன் .
   "இதோ இந்த விமானத்திடல் நிறைய விமானங்கள் வந்து குவியவேண்டும். இதைச் செய்ய முடியுமா ?”

உடனே கோபாலன் வேதாளத்தை ஏவினான் .

   "இதோ"என்று கூறிவிட்டு மறைந்த வேதாளம் ஐந்து நிமிடத்தில் ஒரு விமானத்துடன் பறந்து வந்தது. காற்றாடி சுற்றாமலே அந்த விமானம் காற்றில் மிதந்து வருவதைக் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள். இப்படியாக ஐந்து நிமி டத்திற்கு ஒரு விமானமாக வந்து இறங்கிக் கொண்டே இருந் தது. கடைசியில் அந்தத் திடல் முழுவதும் விமானங்களாக வந்து நிறைந்துவிட்டன. கோபாலன் வேதாளத்திற்கு வேலை கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்.
   விமானியும் மற்ற மக்களும் அதிக அதிசயத்துடன் கோபாலனைக் கவனித்தார்கள். விமானி கோபாலனிடம்