பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

    "சிறுவனே, இத்தனை சின்ன வயதில் நீ எப்படிக் குறளி வித்தை கற்றுக்கொண்டாய் ? என்று கேட்டார்.
    "இது குறளி வித்தையல்ல, எனக்கொரு வேதாளம் அடிமையாயிருக்கிறது. அது எதையும் செய்யவல்லது அது தான் இப்பொழுது தாங்கள் விரும்பிய காரியத்தைச் செய்து காட்டியது. அது என் ஒருவன் கட்டளைக்குத்தான் பணியும்" என்று கூறிக்கொண்டே வரும்போது, 
  " சிறுவனே, நீ எப்படி அந்த வேதாளத்தை அடிமை கொண்டாய் ?" என்று விமானி கேட்டார். கோபாலன் பதில் சொல்லவாய் எடுத்த போது, வேதாளம் அவன் வாயைப் பொத்திவிட்டது அவ னால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் என்ன கேட்டும் பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்ட விமானி, விஷயம் புரியாமல் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் கேட்பதை நிறுத்தமாட்டார் போல் தோன்றிய தால் வேதாளம் கோபாலனை விட்டுவிட்டு அவருடைய வாயைப் பொத்திவிட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு இரும்புக் கை தன் வாயைப்பொத்தியதை உணர்ந்த விமானி துடித்துக் துள்ளிக் குதித்து ஓட்டம் எடுத்துவிட்டார். இதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் வேதாளத்தை யடக்கி

    "ஏன் எங்கள் வாயைப் பொத்து கிறாய் ?" என்று அதட்டினான். அதற்கு வேதாளம். 
     "என் தலைவரே ! பரம ரகசியமான என் விஷயத்தைப்பற்றி அவர் கேட்டார். நான் எப்படி உங்களுக்கு அடிமையானேன் என்று கேட்டார், எங்கே சொல்லிவிடப் போகிறீர்களோ என்று பயந்து உங்கள் வாயைப் பொத்தினேன், கேட்பதை நிறுத் தாமல் அவர் வாயைப் பொத்தினேன் ’’ என்று விளக்கம் கூறியவுடன் 
    "பயப்படாதே நான் சொல்லவில்லை ” என்று அதன் முதுகிலே தட்டிக் கொடுத்தான்.