பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 இந்திய சர்க்கார் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறூர்கள். தங்களுக்குச் சம்பளம் பெரிதல்ல என்றாலும் தேசத்துக்குத் தங்கள் உதவி மிகமிக இன்றியமையாதது. ஆகவே தாங்கள் அவசியம் என்னுடன் புறப்படவேண்டும் "என்றார் விமானி. கோபாலனும் "சரி புறப்படுங்கள் என்றான் . இருவரும் வேகு வேகமாக நடந்து ஒரு விமானத்தில் ஏறிக் கொண்டார் கள். விமானி, ஓட்டிக்கொண்டு டில்லி நோக்கிப் பறந்தார். கோபாலன் டில்லி சென்று மந்திரிகளைப் பார்க்கப் போகும் அவசரத்தில், வேதாளத்தைக் கூடக் கூட்டிக்கொண்டு போக மறந்துவிட்டான். வேதாளத்தையே மறந்துவிட்டான். போகும் வழியிலே விமானத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது. எனவே அது பறக்க மறுத்தது. நேராகத் தலை குப்புறக் கீழே விழுந்தது. கோபாலனும் விமானியும் சிதறி எங்கோ உள்ள இடமொன்றில் விழுந்தார்கள். கோபாலன் தான் முதலில் தரையில் விழுந்தான். விமானி அவன் மேல் விழுந்தார் . கப்பல் தூரத்தில் எங்கோ விழுந்து சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. பறவைக் கப்பலிலிருந்து விழுந்தவுடன் கோபாலன் மயக்கமுங் கிறுகிறுப்பும் வந்து கண்களை மூடிக்கொண்டு விழுந்து விட்டான். மறுபடியும் சிறிது சிறிதாக உணர்வு வந்தபோது அவன்

 "வேதாளம் ! வேதாளம் ! என்னைத் தூக்கு !’ என்று கூவினான். மென்மையான இரண்டு கைகள் அவன் கையிரண்டையும் பிடித்துத் தூக்கிவிட்டன. வேதா ளத்தின் கைகள் முரடாக இருக்குமே, இப்பொழுது மென்மை யாக இருப்பதன் காரணம் என்ன ? ஒரு வேளை அடிபட்ட உடம்பை மெதுவான கையால் தூக்கவேண்டுமென்று வேதா ளம் தன் கையை மென்மையாக்கிக் கொண்டதோ என்று நினைத்துக்கொண்டே கோபாலன் தன் கண்களைத் திறந்தான்.