பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15 ஆ ! அவன் எதிரே அவனுடைய அருமைத் தங்கை மீனா நின்று கொண்டிருந்தாள். சுற்று முற்றும் பார்த்தான். பழைய முருங்கை மரத்தடியிலே தான் நிற்பதைக் கண்டான். டில்லி செல்லும் வழியில் விழுந்தவன் எப்படி முருங்கை மரத்தடியில் வர நேர்ந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. முருங்கை மரக்கிளைப் பக்கம் தன் தலையை நிமிர்த்தி, ஏ வேதாளம் ! என் அடிமை வேதாளம் வா இங்கே !’ என்று கூவினான் வேதாளம் வரவும் இல்லை, பதிலும் இல்லை.

  • ஏ வேதாளம் வருகிறாயா ? இல்லையா ?’ என்று கதறினான்,

மீனா பயந்து போய்த் திரும்ப வீட்டுக்கு ஓடி, பாட்டியிட மும் அம்மாவிடமும் அண்ணனுக்கு வேதாளப் பைத்தியம் பிடித்து விட்டது ' என்று சொன்னாள். உடனே பாட்டி, அம்மாவை ஓடிப் பார்க்கும்படி அவசரப்படுத்தினாள். அம்மா வும் தனக்குத் தெரிந்த நாலைந்து ஆட்களைக் கூட்டிக் கொண்டு, கோயில் பண்டாரத்தையும் கூட்டிக் கொண்டு காட்டு முருங்கை மரத்துக்கு ஓடி வந்தாள். கோபாலன் அப் பொழுது தான் ஏ வேதாளம் ! நீ இப்பொழுது வருகிறாயா இல்லையா ? வராவிட்டால் உன்னேக் கட்டிப் போட்டு விடு வேன் ’’ என்று கூறிக் கொண்டிருந்தான். "சரியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. நல்ல பூசை போட்டால் தான் விடும்" என்று சொல்லிக்கொண்டே பண் டாரம் கோபாலனைப் போய்க் கெட்டியாகப் பிடித்துக்கொண் டான். வந்திருந்த நாலைந்து ஆசாமிகளும் கோபாலனைக் கயிற்றால் கட்டி வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். அம்மா அவன் பின்னால் அழுதுகொண்டே வந்தாள். ஊருக்குள் வரும்பொழுது நன்றாக இருட்டி விட்டது.