பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 மாஸ்டர் கோபாலன்

      நாரா. நாச்சியப்பன்

"கோபாலா!" "ஏன் சார் !" "நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன ?"

"அல்லாவுதீனும் அதிசய விளக்கும்" :

"எங்கே, அந்தக் கதையைச் சொல். பார்க்கலாம்"

"சரியாக நினைவில்லை சார்"

அவ்வளவுதான். ஆசிரியருக்கு வந்தது கோபம். எடுத் தார் பிரம்பை. அடித்தார் கோபாலனை, நன்றாக அடித்தார். கோபாலனுக்கு அடிபட்ட இடமெல்லாம் புடைத்துத் தழும்பேறிவிட்டது. கத்தினான், கதறினான், கூவினான், அழுதான், கண்ணீர் கசிந்து உருண்டது, கன்னத்தில் வழிந்தது. " கழுதை! கதை கூட உன் புத்தியில் ஏறவில்லை, வேறு பாடம் எப்படிப் பதியப்போகிறது ? ' என்று கோபத்தோடு கூறி, அவன் கண்ணீரைக் கண்டு பரிதாபத்தோடு அடிப் பதை நிறுத்திக் கொண்டார். ஆசிரியர், பிறகு பக்கத்தில் இருந்த ரஹீமைச் சொல்லச் சொன்னார். அவன் அழகழ காகச் சொன்னான், வீட்டில் பாட்டி கதை சொல்வது போல அருமையாகச் சொன்னான். “ டேய் கோபாலா ? ரஹீம் எவ்வளவு அழகாகக் கதை சொல்கிறான் கவனித்தாயா?" என்று ஆசிரியர் ரஹீமைத் க்கிப் பேசினார்.