பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/7

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
4

சமயம் அவனுக்கு அல்லாவுதீனின் கதை நினைவுக்கு வந்தது. அல்லாவுதீனுக்கு வேதாளம் அடிமை வேலை செய்தது. அதே போல் எனக்கும் அடிமை வேலை செய்யச் சொல்வேன்.

பாட்டி வீணாகப் பயமுறுத்தி விட்டாள் அது சுத்தப் பொய். வேதாளம் என்னைப் பிடிக்க வந்தால் நான் அதை அடக்குவேன். பிறகு அடிமை வேலை செய்யச் சொல்வேன். வரட்டும் அந்த வேதாளம் ! என்று காத்துக் கொண்டிருந் தான். நின்று நின்று அவன் கால்கள் கடுத்து விட்டன. தரையில் உட்கார்ந்து கொண்டான். களைப்பாக இருந்தது. தரையிலே படுத்துக் கொண்டான். சடச் சடச் சட முருங்கை மரக்கிளைகளின் இடையே சத்தம் கேட்டது. கோபாலன் நிமிர்ந்து பார்த்தான். கருப்பாக ஏதோ ஒன்று படக்கென்று தரையில் குதித்தது. கோபாலன் அரண்டு எழுந்திருந்தான். அந்தக் கருப்பு உருவம் திடுதிடுவென்று வளர்ந்தது. ஆகாயம் வரைக்கும் வளர்ந்தது. கோபாலன் எட்டி உச்சியில் பார்த்தான். தலை தெரியவில்லை. குனிந்து பார்த்தான் கால் தெரியவில்லை. கால் தரைக்குக் கீழே மிகுந்த ஆழம் வரை பதிந்திருந்தது. எதிரில் பார்த்தான் ஒரே கருப் பாக இருந்தது. கோபாலன் பார்த்துக்கொண்டே இருக்கும் போது வானம் அதிரும்படியாக ஒரு குரல் கேட்டது. "சிறுவனே நீ யார் ?"என்று கேட்டது. கோபாலன் பலம் கொண்ட ம ட் டு ம் இரைந்து "நீ யார் ?" என்று கேட்டான். என்ன அதிசயம் அவன் எதிரே ஒரு குள்ள வேதாளம் நின்றது. ஆகாயம் வரை வளர்ந்திருந்த அந்த வேதாளம் சட்டென்று சுருங்கிக் குள்ளமாக மாறிவிட்டது. அதைப் பார்க்கப் பார்க்க பயமாக இருந்தது. அந்த வேதாளத்தின் முகம் சினிமாவில் வருகிற எ ம தூ த னு டை ய முகம் போல்