பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 பாய்கிற கோபாலனுக்கு இது என்ன சொல்லித் தர வேண்டிய பாடமா ?

  "ஏய் வேதாளம்? உன்னால் என்ன என்ன செய்ய முடியும்?" ஒரு முதலாளி போல் இருந்தது கோபாலனின் மிடுக்கான பார்வை.
   "தலைவரே! நான் வா னி ல் பறப்பேன், வண்ணக் கடலில் மூழ்குவேன். இந்த உலகம் முழுவதும் சுற்றுவேன். பெரிய உருவமாய் வளர்ந்து விளங்குவேன். தேவையான போது அணுவாகவும் மாறிக்கொள்வேன். நீங்கள் நினைத்த பொருளை எடுத்து வருவேன். நீங்கள் நினைத்த இடத்திற்கு உங்களை எடுத்துச் செல்வேன். இன்னும் எப்படி எப்படி நீங்கள் கட்டளை இடுகிறீர்களோ அப்படி அப்படி முடித்துக் கொடுக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்.
   “சரி முதலிலே எங்காவது போய் ஒரு சுருட்டுக்கட்டு எடுத்துவா !”
   " த லை வ ரே ! தாங்கள் சொன்னதைச் செய்கிறேன். ஆனால் இ வ் வ ள வு சின்ன வயதில் சுருட்டுப் பிடிக்கக் கூடாது.”
  "ச ட் சொன்னதைச் செய் ! அ தி க ப் பேச்சுப் பேசாதே !"

என்று கோபாலன் மிரட்டியவுடன் வேதாளம் பயந்து நடுநடுங்கி,

  "இதோ நொடியில் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் கோபாலன் எதிரில் வந்து நின்றது. அதன் கையில் ஒரு பெரிய சுருட்டுக்கட்டு இருந்தது. "இதோ நீங்கள் கேட்ட பொருள்"  என்று கோபாலனிடம் கொடுத்தது. அ  தை வாங்கிக்கொண்ட கோபாலன், மகிழ்ச்சியுடன் வேதாளத் தைத் தட்டிக்கொடுத்து, 
  "இலண்டன் மாநகரில் முதலமைச்