பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரையறை செய்து பாடநூல்களை உருவாக்கும் பொழுது, அறிவியல் கருத்து வெளிப்பாடு இயல்பாகவும் ஆற்றல் பெற்றும் விளங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனை மையப்படுத்தியே இன்று அறிவியல் உரைக்கோவையும் (Scientific Discourse) அறிவியல் மொழிநடையும் எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்பல்கலைக்கழகம் அறிவியல் கலைச்சொல்லாக்கப் பணியை 983 - இல் தொடங்கிப் பல்வேறு அறிவியல் துறைசார் கலைச்சொற்களை உருவாக்கி அவற்றை நிலைபேறாக்கம் செய்து ஆறுதொகுப்புகளாக வெளியிடுகிறது. இத்தொகுப்புகள் அறிவியல் கல்வி வார்ச்சிக்கும், அறிவியல் கருத்துப் பரவலாக்கத்திற்கும், தொடர்புள்ள பீத கல்வி ஆய்வுப் பணிகளுக்கும் பெரிதும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கலாம். நாள் : 21 . 07. 97 கி. கருணாகரன்