பக்கம்:மின்னணு மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மின்னணுவியல்" என்ற சொற்றொடர் மின்னணுக்களின்' பண்புகள் சிறப்பியல்புகள், அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், அவற்றின் இயக்கப் பயனாவான சாதனங்களின் செயலாக்க வினைகள் போன்றவற்றைக் குறிப்பதாகும். இயற்பியல் துறையில் ஓர் அங்கமாக இருந்த எலக்ட்ரானிக்ஸ், இன்று தொழில் துறை, மருத்துவத்துறை, வேதியியல் துறை, கம்ப்பூட்டர் துறை, செய்தித் தொடர்புத் துறை, உயிரினத்துறை, மொழியியல் துறை போன்ற அறிவியல் துறையில் பெரும் பங்கு வகித்து தழைத்தோங்குகிறது. வளர்ந்துவரும் அறிவியல் - தொழில் நுட்பக் கருத்துக்களைத் தமிழில் சொல்லும் ஆர்வம் பருகி வரும் காலம் இது, பொரியல் கல்வியைத் தமிழ்வழிக் கற்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் இந்த அகராதி வெளிவருகிறது. அறிவியல் கருத்துக்களைத் தமிழ்மொழியில் விளக்கும் முயற்சிக்கு முதற்படி, சரியான கலைச்சொற்களை உருவாக்குவதேயாகும். பட்டப் படிப்பு வரை பயிற்சியளிக்கத் தேவையான, "எலக்ட்ரானியல்" கலைச்சொற்கள் ஓரளவு உருவாக்கப்பட்டுவிட்டன. கடல் போன்ற இவ்வியலில் இது ஒரு சிறு துளி தான். மேலும், புதிய கருத்துக்களினால் உந்தப்பட்டு, உருவான கலைச்சொற்களையே மீண்டும் சீரமைக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. (ஆங்கிலக் கலைச்சொற்கள் பலவும் கூட இவ்வாறு காலப்போக்கில் மாற்றப்பட்டிருக்கின்றன.) மேலும், வேறுபட்ட வினை விளைவுகளுக்குக் கூட ஒரே கலைச் சொல் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகிறது. எனினும், எந்தத் துறையில், எந்தப் பொருளில் அச்சொல் கையாளப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் கொடுக்கப்படுமாயின் அச் சொல்லைக் கையாளுதல் எளிதாகும். ஓவ்வொரு துறைக்கும் கலைச்சொல் விளக்க அகராதியை உருவாக்க வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது. இந்நூலின் நோக்கமும் அதுவே தமிழ் நாட்டுப்