பக்கம்:மின்னல் பூ.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாராசாரி


பாராசாரி எதிரில் நிற்பதைப்
பார்க்க வில்லையா?
வீராவேசம் காட்டி மகனே
வெற்றி நாட்டவே
பிடரி பற்றித் தாவியேறிப்
பெருமை கொண்டுநீ
திடரும் மேடும் தேசமெங்கும்
திசைகள் அதிரவே
பாய்ந்து சென்று பரியை வென்று
பாரிலென்றும் நீ
ஆய்ந்து கூறும் அறிஞர்புகழ
அமர மெய்துவாய்
என்று தாயும் வானிலிருந்து
நன்று கூறினாள்
கன்று பிரிந்த ஆவைப்போலக்
கனியும் நெஞ்சினாள்
சேணமில்லை லகானில்லை
சிறிய சாட்டையும்
கோணலற்ற தடியுமில்லை
கூவியழைத் தெனை
வருகவென்று பரிவுபேசி
வருந்தி யழைத்துமே

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/104&oldid=1121443" இலிருந்து மீள்விக்கப்பட்டது