பக்கம்:மின்னல் பூ.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றும் பதினாறு


உலகங்கள் தோன்றுவதும் மறைவதுமாகிய படைப்புத் தத்துவத்தைக் கூறுவது இக்கவிதை. இதற்குக் குறிப்பாகவே விளக்கம் எழுத இயலும்.

நீலத்துப் பாழ்-நீல நிறமான பாழ்வெளி.

கோளத்துப் பம்பரங்கள்-கோளங்களாகிய பம்பரங்கள். பம்பரம் நிலையில் நின்று வேகமாகச் சுழல்வதைப் பம்பரம் தூங்குகிறது என்று கூறுவார்கள். அவ்வாறு தாங்கும் போது அதிலிருந்து ஓர் ஒளி எழும்.

தூங்காத ஆட்டத்தான் - தோற்றம் மறைவு என்கிற நடனம் ஓயாது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நடனத்தின் பவனியிலே வாண வேடிக்கைகளும் உண்டு. கோள்களும் தாரகைகளும் பொறி பொறியாய் உதிர்கின்றன.

நீளத்து நெடுவழிபோ நீள்வட்டப் பொய் வழியோ-ஆகாயப் பரவெளியானது நீண்டு போய்க் கொண்டே இருக்கிறதா அல்லது நீள்வட்டமாக அமைந்துள்ளதா? இந்த இரு வகையான கருத்துக்களும் வானவியல் விஞ்ஞானிகளிடையே நிலவி வருகின்றன.

மணிக்கூண்டு என்பது காலக் கணக்கைக் குறிக்கிறது.

பூ நின்று பிறப்பித்துப் பால் உறங்கி வாழ்வித்து- தாமரை மலரானாகிய பிரமாவாக நின்று படைத்தும், திருப்பாற்கடலில் பள்ளிக் கொண்டு வாழ்வித்தும்.

தாளம் தவறடித்து - கோளங்களின் போக்கிலே ஓர் ஒழுங்குண்டு. அந்த ஒழுங்கு தவறுமானால் ஒன்றொடொன்று மோதிச் சிதறும்.

புன்னகையில் சினங்காட்டி - சிரிப்பும் கோபமும் கலந்தே இருக்கின்றன.

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/24&oldid=1110405" இலிருந்து மீள்விக்கப்பட்டது