பக்கம்:மின்னல் பூ.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கை வளம்


1

வானமெங்கும் பொங்கு சுடர்
வைகமெலாம் இன்ப வெள்ளம்
தாங்குமே ஆட்டம்
இன்னிசையாம் பாட்டம்
களிப்பொலியே கேட்டேன்
கையில் ரண்டு காசிருந்ததே

2

வானமெங்கும் காரிருளே
வையமெலாம் துக்கமயம்
எங்குமே வாட்டம்
இடர்ப்பகையாம் கூட்டம்
அழுங் குரலே கேட்டேன்
அந்தோ கை வெறுங்கையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/60&oldid=1117612" இலிருந்து மீள்விக்கப்பட்டது