பக்கம்:மின்னொளி.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

சடை:- அவுரு திட்டு கெடக்குதுங்க. ஒங்களை நெனைச்சாத்தான் எனக்கு வருத்தமாருக்குது.

செல்ல :- சடைச்சி சாப்பாடு, படுக்கை எல்லாம் பள்ளிக்கூடத்திலேயேதான். செளகரியமாக இருக்கிறது. கவலைப்படாதே. நீ நன்றாகப் படி,

சடை - ஆகட்டும் வாத்தியாரே. நான் வர்றேன்.

(புல்லும் அரிவாளும் எடுக்கிறாள்)

மின்னொளி:- சடைச்சி! இங்கே நாம் சந்தித்ததை.

சடை - யாருகிட்டேயும் சொல்லமாட்டேம்மா.எனக்குத் தெரியாதா என்ன, ஊரு நெலமை.

(போகிறாள். சடைச்சி.)

செல்ல :- மின்னொளி! நானும் வருகிறேன்.

மின்னொளி :- (புன்சிரிப்போடு). ஏன்? ரொம்ப அவசரமா?

செல்ல :- அப்படியொன்றுமில்லை. நாம் தனித்திருப்பதை யாரேனும் பார்த்தால் ...

மின்னொளி :- துன்பம் இருவர்க்குக்கானே வரும்?

செல்ல :- மழை பொதுவாகப் பெய்தாலும், செந் நீரும் கருநீரும் ஆவதுண்டு நிலைப்பண்புக்கு ஏற் றபடி! நீ ஊர்த் தலைவர் மகள். நான் ஊருக் கிளைத்த உபாத்தியாயர். வேற்றுமையில்லை?

மின்னொளி : இப்படியெல்லாம் சொல்லி என்னை ஏமாற்ற முடியாது. உரமான அன்புக்கு முன்னால் ஏற்றத் தாழ்வு என்ன செய்யும்?

செல்ல :- உன் போன்ற அழகான கிளியை, வயிரமுத்துப் போன்ற பூனையிடம் சேர்க்கும்!

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/25&oldid=1412888" இலிருந்து மீள்விக்கப்பட்டது