பக்கம்:மின்னொளி.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

செல்ல :- ஃகும்...என்று ஒழியுமோ இந்தக் காட்டு மிராண்டித்தனம்?

மின்னொளி:- (ஆசையோடு) நாம் ஒன்று சேர்ந்த பிறகு,

செல்ல :- மின்னொளி! நிறைவேறுவது கடினம். நீ பகற்கனவு காண்கிறாய். நான் வருகிறேன். (செல்லத்துரை போகிறார்.)

மின்னொளி என்ன..? காதல் ஒரு கனவா..?

(பெருமூச்சு விடுகிறாள் மின்னொளி)

எட்டாம் காட்சி,

(பொன்னப்பர் வீடு. அரசாங்க சேவகன் அவரிடம் உத் தரவொன்றைக் கொடுத்து, கையெழுத்துப் பெற்றுச் செல்கிறான். உள்ளே வந்த இருளன் பூசாரி அதைப் பார்க்கிறான்.)

இருளன் :- எசமான்! அது யாருங்க? கோர்ட்டு சேவகனாட்டம் இருக்குது?

பொன்: ஆமா,ஜில்லா கலெக்டர்கிட்டேருந்து ஒருஅவசரஉத்தரவு (வயிரமுத்து வருகிறான்)

இருளன் :- என்னங்க? இந்த நோம்பி நொடியிலே கூட?

பொன் :- காளிக்கு ஆடு, கோழி, எருமை, ஏதும் பலி யிடக்கூடாதாம். மொரட்டுத்த்னமா ஒடம்பிலே ஊசி குத்திகிட்டு ஆடக்கூடாதாம். தடை யுத் தரவு.

இருளன் :- ஐயோ! இதென்ன விபரீதமா இருக்குது

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/27&oldid=1412892" இலிருந்து மீள்விக்கப்பட்டது