பக்கம்:மின்னொளி.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

இருளன் :- (அஞ்சி) யாரங்கே? சடைச்சி!

சடை - ஏம்ப்பா?

இருளன் :- நீ இங்கேதான் இருக்கிறியா?

சடை :- சொம்பு எடுத்தேம்பா, தவறி உழுந்துடிச்சி.

இருளன் :- சரி சரி பீடை வயிரமுத்து சொன்னதைத் தவறாமெ செய்யி. நம்ம காளி சத்தி யுள்ள தெய்வம். ஒன் இஷ்டமெல்லாம் நெறை வேறும். காளி கருணை செய்யட்டும்!

(ஆசீர்வதிக்கிறான்.) பத்தாம் காட்சி.

(பொன்னப்பர் வீடு. அம்மை வார்த்துத் துரும்பென இளைத்துப் படுக்கையில் கிடக்கிறாள் மின்னொளி, அருகே கவலையில் தோய்ந்த பொன்னப்பர்

மின்னொளி:- (இருமி, கன சுரத்தில்) அப்பா...எனக்கு.

பொன் :- என்னம்மா வேணும்? ஒடம்புக்கு எப்படியிருக்குது? காபி குடிக்கறையா?

மின்னொளி :- வேண்டாம்.

பொன் :- பின்னே என்னம்மா வேணும்? பயப்படாம சொல்லு கண்ணு.

மின்னொளி:- (இருமி) உம்...அப்பா தயவு செய்து கொஞ்சம் விஷம் கொடுங்கள். மரணத்திலாவது நான் சாந்தியைப் பெறுகிறேன்.

பொன் :- (பரிவோடு) மின்னொளி ஏம்மா இப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/31&oldid=1412914" இலிருந்து மீள்விக்கப்பட்டது