பக்கம்:மின்னொளி.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

வயிர :- அதென்னமோ, எம்மேலே பெசகில்லே.

இருளன் :- பெசகு இல்லியா? நீ ஒரு கொலைகாரன்!

வயிர :- நீ மாத்திரம் யாரு? எங்கூட்டாளிதான்.

இருளன் :- அடேய் நாம்பெத்த மகளை, மொடமா

பண்ணிட்டியேடா பாவி நானா கொலைகாரன்?

வயிர :- எரியற கொள்ளிக்கு நீ எண்ணை! ஒன் வயித்துப்பாட்டைக் கெடுத்தான்னு ஒனக்குக் கோவம், ஏங் கல்யாணத்தைக் கெடுக்கறான்னு எனக்கு ஆத்திரம். ரெண்டும் ஒண்ணுசேந்துது இப்பத்தான் என்ன? செஞ்சதிலே ஒண்னும் தவறில்லியே நாமொன்னு நெனைக்க தெய் வம் ஒண்னு நெனைச்சிட்டுது.

இருளன் :- படுபாவி! தெய்வத்தோட பெயரைச் சொல்ல ஒனக்கே துடா யோக்யதை?

வயிர :- ஒனக்கு மாத்திரம் யோக்யதை ரொம்ப உண்டாக்கும்?

இருளன் :- எங் குடியைக் கெடுத்த நாடோடிப் பயலே கழுத்தைத் திருவி ரெத்தத்தைக் குடிச் சிடுவேன். ஜாக்கிரதை!

வயிர :- முறுக்காதே பூசாரி! இது ஆட்டுக்குட்டி யில்லே, அசல் புலிக்குட்டி! நான் யாரோட மருமகன் தெரியுமா?

இருளன் :- எல்லாந் தெரியும். நீ ஒரு ஊர் சுத்தி, அயோக்யன், திருடன், இரக்கமில்லாத பாவிங் கறதும் தெரியும். நீ மாத்திரம் இனிமே இந்த ஊர்லே இரு; பழிக்குப்பழி வாங்காமெப்போனா எம் பேரு இருளம் பூசாரியில்லே!

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/34&oldid=1412918" இலிருந்து மீள்விக்கப்பட்டது