பக்கம்:மின்னொளி.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

மின்னொளி :- (பரிதாபமாக) அப்பா ... நீங்கள் ஏன் வீணாக வருந்தவேண்டும்?

பொன்; மகளே! சத்தியத்தைத் தவிடுபொடியாக்கி விட்டானே, வயிரமுத்து. அடுக்குமா இது? ஐயோ! என் ஆசையிலும், ஒன் வாழ்க்கையி லும், மண்ணையிட்டானே பாவி

மின்னொளி:- அப்பா ! ... நான் இறப்பது ஒன்று தான் இதற்குப் பரிகாரம்' என்னால்தான் இவ் வளவும்....?

- (இருளனும் செல்லத்துரையும் வருகின்றனர்.)

இருளன் :- என்ன எசமான் ஒரு மாதிரியா இருக்கிறீங்க? என்ன மனவருத்தம்?

பொன் :- (நெஞ்சம் குமுறி) பூசாரி நான் என்னன்னு சொல்லட்டும். காளி முன்னலே செஞ்ச சத்தி யம். அதைக் கால்லே மெதிச்சி, எம் மொகத் திலே கரியைப் பூசிட்டுப் போயிட்டான் வயிர முத்து! அவன் மின்னொளியை மணந்துகொள்ள மாட்டானாம்.

இருளன் :- அப்படியா ? ஏன்?

பொன் :- அம்மைவாத்து எம் மகளோட அழகு கொலைஞ்சி போச்சாம். நானும் கடங்காரனா யிட்டேனாம், எங்களாலெ சொகமில்லையாம்! பூசாரி இது என்ன அநியாயம் .. !

இருளன் :- அயோக்கியத்தனம்னு சொல்லுங்க!

பொன் :- கடங்காரன் மகள். கெளரவம் கொலைஞ் சது.பொன்னாக மின்னியவள், செல்லாக் காசு, செம்பு பித்தளையாகிவிட்டாள்! ஊரறிந்த சத்தி யம். யாரு கட்டுவாங்க என் மகளை? ஐயோ!.

37 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/39&oldid=1412923" இலிருந்து மீள்விக்கப்பட்டது