பக்கம்:மின்னொளி.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

னம் இருக்கும் என்பதை, இப்போதாவது ஒப் புக்கொள்கிறீர்களா?

பொன் :- மகளே! படிப்பின் பெருமையறியாத பாவி நான் செல்லத்துரை என்மேல் ஏதா வது தவறு இருந்தாலும்...

செல்ல :- சென்றதை மறந்துவிடுங்கள். இனி நாமெல்லோரும் சேர்ந்து, இந்தக் கிராம முன் னேற்றத்தில் ஈடுபடுவோம். நகரத்திலுள்ள வசதிகளை, முற்போக்குச் சாதனங்களை நம் மக் களும் பெறச் செய்வோம். குருட்டு நம்பிக்கை களை விரட்டியடிப்போம். கல்வி, சுகாதாரம், விவசாயம், வளர்வதற்குத் திட்டமிட்டு வேலை செய்வோம். இதற்கெல்லாம், மின்னொளி என க்கு வழிகாட்டி நலம் பயக்கும் வான் பொருள்!

மின்னொளி : (நாணத்தோடு) வெறும் மின்னல் நான்,எனக்கு ஒளி அவ்விடம்தானிருக்கிறது

பொன் :- எல்லாம் காளியின் கருணை.

இருளன் :- இல்லை எசமான்! அதுதான் தப்பு. நாம்ப என்ன பண்ணியும், காளியோட கருணைக்குப் பாத்திரமானவங்க நாம்ப்பல்ல எசமான்; வாத் தியாருதான்! இவுரு சொல்றதும், செய்யறதுந் தானே காளிக்குச் சம்மதமா இருக்குது!

பொன்:- பூசாரி எனக்குப் பரமசந்தோஷம். மின்னொளியால் இந்த ஊருக்கே விமோசனம் கிடைக்கட்டும். எனக்கும் பெருமை.

(வேலையாள் ஓடிவருகிறான்.)

ஆள் - (பதறி) எசமான்! எசமான்! எசமான்!!

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/41&oldid=1412926" இலிருந்து மீள்விக்கப்பட்டது