பக்கம்:மின்னொளி.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

முதற்காட்சி.

(மணியக்காரர் பொன்னப்பர் வீடு. அவர் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலைப்பாக்கு மென் றுகொண்டிருக் கிறார். எதிரே கணக்குப் புத்தகங்கள், கையிலே பகுத்தறிவு இதழும், முகத்திலே ஆவலுமாக மின் னொளி தோன்றுகிறாள் ) மின்னொளி :- அப்பா ஏதாவது பத்திரிக்கை வர

வழையுங்களேன்.

பொன் :- நமக்கு எதுக்கம்மா அதெல்லாம்! பட்ன வாசல்லே இருக்கிறவங்களுக்குத்தான் பத்தி ரிக்கை பார்க்கலேன்ன தின்ன சோறு ஜீரண மாகாது -

மின்னொளி :- அப்படியானால் எ ன் னை எதற்கப்பா

படிக்கவைத்தீர்கள்?

பொன் :- ஏதோ காலெழுத்து தெரிஞ்சிருந்தா தேவு லேன்னு பாத்தேன். இப்பத்தான் என்ன? நம்ம தாத்தா படிச்ச பக்தவிஜயம் இருக்குது, பாரதம், இருக்குது, கந்தபுராணம் இருக்குது எடுத்துப் படிம்மா..ரொம்ப நல்லது.

(பழைய பள்ளிக்கூடத்தின் புதிய ஆசிரிய இளைஞர் செல்லத்துரை வருகிறார்.)

செல்ல :- (பணிவோடு) ஐயா! வணக்கம்.

பொன் :- புது வாத்தியாரா! வாங்க உக்காருங்க,

என்ன விசேஷம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/8&oldid=1412413" இலிருந்து மீள்விக்கப்பட்டது