பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுழைவாயில் 1948ஆம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த காலம். ஆங்கில நெடுங்கணக்கைக் கற்பித்த ஆசிரியரே எனக்கு ஆங்கிலப் பாட ஆசிரியர். தமிழ்ப் பாடல்களை நன்கு மனத்தில் பதியும்படி செய்யும் நல்லாசிரியரைப் போலவே வல்லமைமிக்கவர் இசரவேல் என்ற கிருத்துவப் பெருந்தகை, நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும் அவர் நடத்திய ஆங்கிலப் பகுதிகள் அனைத்தும் இன்றும் எனக்கு மனப்பாடம். என் ஒருசாலை மாளுக்கர்களை இன்று கண்டாலும் நாங்கள் அன்று பெற்ற ஆங்கில அறிவுக்கு அவரையும் எங்கள் தலைமை யாசிரியரையும் நினைவுகூர்வோம். காப்பியக் கவிஞர் மில்ட்டனைப்பற்றிக் கவிஞர் வேர்ட்சு வொர்த்து எழுதிய ப தி ஞ ண் கு அடிப் பாடல் ஒன்று தொடர்ந்து நான்கு வகுப்புகளில் நடத்தி முடித்தார். ஆசிரியர் பாடல் நெஞ்சில் கல்மேல் எழுத்தாயிற்று. ஆங்கில நாட்டு வரலாறும் தெரிந்தது. அதே காலத்தில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட ஆங்கிலப் புலவர் வரலாறு எங்கட்குத் துணைப்பாடம். அதில் மில்ட்டன் வரலாறு கா. அப்பாத்துரையாரால் வரையப்பட்டிருந்தது. வேர்ட்சுவொர்த்துப் பா - லு ம் அதில் தமிழாக்கப்பட் டிருந்தது. ஆனல் அப் பாடல் எங்கள் ஆங்கில வகுப்பாசிரியர் நடத்திய அளவு புரியவில்லை. அவ்வளவு கடினமாக அந் நாளில் பட்டது. பாட்டெழுதும் பயிற்சியில் எனக்கு அந் நாள்கள் நடை வண்டிக் காலம். பாவேந்தரின் குயில் மாத ஏட்டில் என் பாடல் ஒன்று இடம்பெற்று என் பாட்டுற்றுக்கு உந்தாற்ற லாக இருந்த காலம். எனவே வேர்ட்சுவொர்த்து மில்ட்டன் பற்றிப் பாடிய பாட்டினைத் தழுவி: vii