பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9:0 மாமல்லன் சிம்சோன் கைக்கு ஒப்புவித்துவிட்டார். உன் எதிரிகள் உன் கண்களைப் பிடுங்கவும், உனக்கு விலங்கிடவும், உன்னைச் சிறையிலடைக்க வும் அவர் ஒப்பிவிட்டார். மற்றக் குற்றவாளிகளுடன் சிறை யில் அடைக்கப்பட்டுக் கழுதைகளோடும் மற்ற அடிமைக ளோடும மாவரைக்க வேண்டியவனுயிருக்கிருய். புகழ் மிக்க முடியின்றி நீ இந்தக் கீழான உடல் உழைப்பைத் தவிர வேறு எதற்கும் பயனற்றவளுய் இருக்கிருய். இப்படிப்பட்ட உன்னோடு ஒரு சிறந்த வீரன் போரிடுவது உகந்தது அன்று. உன்னை வாள்கொண்டு தாக்குவது அப்படிப்பட்ட வீரன் தன் புகழுக்குத் தானே இழுக்கு ஏற்படுத்திககொள்வதற்கு ஒப்பாகும். ஒரு முடிதிருததுபவன் கத்தி உன்னை அடிபணிய வைக்கப் போதுமானது. சிமசோன்: இழிசொற்களை உன்னிடமிருந்து பெறுவது எனக்கு ஏற்றதுதான். இதனினும் கொடியது எனக்கு நேரிட வேண்டும். இத்தனைக் கொடுமைகளையும் கடவுள் முறையாகவே எனக்குத் தந்திருக்கிரு.ர். எனினும் முடிவில் இறைவன் என்னை மன்னிப்பார் எனற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அவரது காதுகள் எப்போதும் திறநதே இருக்கின்றன. பார்வையோ தியோர்களின் மேலேயே உள்ளது. அவரின் இரக்கத்தை நான பெறுவேன். எனவே உன்னை மீண்டும் போட்டிககு அழைககிறேன். எதிரிடையின் மூலம் யாருடைய கடவுள் வல்லமை மிக்கவர் என்பதைத் தீர்மானிக்கலாம். உன் வருணனு அல்லது இசுரவேலா கள் வணங்கும் இறைவன? யார் ஆற்றல் மிக்கவர் என்பதைத் தீர்மானிப்போம். அரப்பா: உன் எல்லாச் செயல்களிலும் உன்னைத் தேவன் காத்துக்கொள்வார் என்ற உனது நம்பிக்கை புதுமை யாகவேயுள்ளது. நீ ஒரு கொலைகாரன், கிளர்ச்சிககாரன், கொள்ளைக்காரன். சிமசோன்: செருக்குள்ள அரக்கனே! உனது வீரம் சொல்லில உள்ளதேயன்றிச் செயலில் இல்லை. எப்படி நீ என்னைக் கொலைகாரனென்றும், கொள்ளைக்காரன் என்றும் காட்டுவாய்.