பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மாமல்லன் சிம்சோன் படி, அவருடைய அதிகாரத்துக்குட்பட்டுச் செயல்பட்டேன். என் நாட்டை விடுவிக்கப் போதுமான வலிமையை அவர் எனக்குத் தந்திருந்தார். அடிமையுணர்வுகொண்ட இசுர வேல் மக்கள் எ ன் னை த் த ங் க ளி ன் கடவுளால் அனுப்பப்பட்ட மீட்பன்' என்று ஏற்றுக்கொள்ளாமல் பகை வர்களிடம் என்னை ஒப்புக்கொடுத்தார்கள். அது அவர்கள் கடவுளின் பெருமைக்கு ஏற்படுத்திய களங்கம். அதன் பொருட்டே, இன்றுவரை அவர்கள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிருர்கள். நான் இசுரவேலர்களை மீட்கப் படைக்கப்பட்டேன். அது வானுலக ஆணை. தீலியாள மட் டும் என்னே வஞ்சிக்காவிட்டால், இன்று நான் பெலித்தியர்க ளின் படைபலத்தையும் விஞ்சி வெற்றி பெற்றிருப்பேன். உங்கள் படைகளல்ல என்னை வீழ்த்தியது. எனது தவறே என் தோல்விக்குக் காரணம். உனது தந்திரமான இந்தப் பேச்சு கள் பயனற்றுப்போய்விட்டன. உன் எதிராளியாகிய நான், பார்வையின்மையால் குருடனகிவிட்ட இந்த நிலையி லும் மூன்ருவது முறையாக உன்னைப் போருக்கு அறைகூவல் விடுக்கிறேன். உன்னிடம் போரிடுவது எனக்கு இழுக்கு. அரப்பா: உன்னைப்போன்ற புறக்கணிக்கப்பட்ட, குற்ற வாளிபோல் அடிமையாக்கப்பட்ட, சாத் தண்டனைக்கெனத் தள்ளப்பட்ட ஒருவனிடம் எந்த மதிப்புள்ள மாந்தனும் சண்டையிட விரும்பமாட்டான். சிம்சோன்: இதைச் சொல்லவா நீ இங்கு வந்தாய். வீண் புகழ்ச்சிக்காரனே, என் வலிமைபற்றி பேசவா வந்தாய். என் அருகில் வா. என் தோளின வலிமையை ஆய்ந்து பார்க்காமல் இங்கிருந்து போகாதே. என் கைகள் உன்னை நெருங்காமல் பார்த்துக்கொள். அரப்பா: ஒ! பேயே! இந்த இழி சொற்களை நான் கேட்க வேண்டுமா? இவ் இழி சொற்களுககுச் சாக்காட்டை நான் தரவில்லையே? சிம்சோன்: என்னைக் கொல்வதினின்று உன்னை ஒருவரும் தடுக்கவில்லை. உன்னிடத்தில் நான் எதற்கும் அஞ்சவில்லை.