பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9盘 மாமல்லன் சிம்சோன் மொத்தமாக ஒருவளுகச் செய்துவிடுவதால், பெலித்திய ஆண்டைகளுக்குக் குறைந்த செலவில் மிகுபயன் ஈட்டித் தருகிறேன். எதுவரினும் வரட்டும். எனது கொடிய பகை வனே எனக்குச் சிறந்த நண்பனகப் போகிருன். ஏனெனில், அவன் எனக்கு இறப்பு என்னும் தண்டனையைத் தந்து இந்தப் பரிவு நிலையிலிருந்து என்னை விடுவிக்கப் போகிருன். எனவே அரப்பா எனக்குக் கொண்டுவரப் போகும் மிகப் பெரிய தண்டனையாகிய இறப்பு எனக்குச் சிறந்த நண்பனுகப் போகிறது. என்னைக் கொல்ல முயல்பவர்கள் என்னுடைய அழிவுடன் அவர்களின் அழிவையும் தேடிக்கொள்கிார்கள். அவர்கள் சாத் தண்டனை தருவது எ ன் னே மேலும் துன்புறுத்தவே. ஆனல் அந்தச் சாவே எனது இக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியிட்டு எனக்கு ஆறுதல் அளிக்கப்போகிறது. குழு ஆள்: ஒடுக்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் துன்பங்களை நுகர்ந்த நேர்மையுள்ளம் கொண்ட மக்கள், தங்களே மீட்க முயலும் மீட்பவர்களுக்குப் பிறரால் மேற் கொள்ள முடியாத வல்லமையை இறைவன் கொடுக்கும் போது அதனைக் கண்டு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பெறு கிருர்கள். அம் மீட்பர் ஒடுக்குவாரை வீழ்ச்சியடையச் செய் கின்ருர். ஒடுக்குவோரின் படைக்கலன்களைக் கண்டோ, போர் வீரர்களைக் கண்டோ சிறிதும் அக்கறை கொள்ளாது, வெகு விரைவில் அவர்களின் போர் முன்னேற்பாடுகளைத் தாக்கி, அழித்துத் தங்கள் உயரிய நோக்கத்தை நிறை வேற்றுகிருர்கள். எதிரிகள் அதனைக் கண்டு, அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து தங்களின் பாதுகாப்பு ஆற்றலை இழந்து விடுகின்றனர். ஆனல் பொறுமை அறிவர்களின் தனிப் பண்பாகும். இடுக்கண் சான்ருே.ர்களின் பொறுமைக்கு ஒரு கட்டளைக் கலலாகும் பொறுமையில்ை, பண்பாளன், தன்னையே விடு வித்துக் கொள்கிருன். அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்கிருன். எதைக் கண்டும் அஞ்சாது நிற்கும் துணிவும், அறிவர்களின் பொறுமையும் சிம்சோனே, உன்னிடத்தில்