பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 97 அவர்களின் அடிமையாய் இருப்பதினால் அவர்களின் பொருளற்ற ஆணைகளுக்கெல்லாம் பணிவேனென்று எண்ணி னர் போலும். அவர்கள் சீற்றத்தின் மிகக் கொடிய துயர்களை யெல்லாம் நான் ஏற்கெனவே பட்டுக்கொண்டிருக்கிறேன். துயரத்தால் நான் துவண்டுபோனேன். துன்பத்தால் உடைந்துபோனேன். இந்த நிலையிலும் அவர்களின் முன், என் வலிமையின் அருந்திறனல், அவர்களை மகிழ்விக்க ஆணை யிடப்பட்டுள்ளேன். அவர்களுக்குச் சொல், நான் வர மாட்டேன் என்று. அதிகாரி: என்னிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியை உன்னிடம் விரைவில் சொல்ல நான் பணிக்கப்பட்டுள்ளேன். விரைந்து சொல். இதுதான் உறுதியான விடையா? சிமசோன்: ஆம், போய் உடனே சொல், நான் வர மாட்டேன் என்று. அதிகாரி: இவ் விடையில் ஏற்படப்போகும் விளைவுக் காய் நான் வருந்துகிறேன். சிம்சோன்: நீ வருந்தக் காரணமுண்டு. குழு ஆள்: சிம்சோனே, வினே முற்றிவிட்டது. ஒன்று நீ அவர்களின் விருப்பத்திற்கு இணங்க வேண்டும் அல்லது அதன் பின்விளைவுகளை உன்னை நுகரச் செய்வார்கள். அதிகாரி சென்று விட்டான். அவன் உன் செய்தியை எப்படி மிகைப்படுத்திச் சொல்லப் போகிருனே? யார் அறிவார்? இதைவிட அதிகாரமிக்க ஆணையைப் பெலித்திய ஆண்டை களிடமிருந்து நீ பெறபயோகிருய் என்று நான் நினைக்கிறேன். அந்த ஆணே உன்னல் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அச்சுறுத்துதல் மிக்கதாய்க் காணப்படும். சிம்சோன்: அரும் கமுக்கத்தைக் காட்டிக்கொடுத்த பழியால் இழந்த அந்த வல்லமையை மீண்டும் என் வளரும் முடியில் உணர்கிறேன். அந்த வல்லமையை இப்படி இழி வான முறையில் பயன்படுத்தவா சொல்கிருய். மழைக் கடவுளை வழிபடுபவர்களை மகிழ்விக்க அப் புனித ஆற்றலைப் பயன்படுத்துவது மிகப் பெரிய இழிவு. சிலைகளைச் சிறப்பிக்கும் 4