பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 99. மன்னிப்பு கேட்காவிட்டால், நான் இறைவளுல் மன்னிக்கப் பட மாட்டேன். வருணன் கோயிலில் நானே அல்லது நீயோ சில காரணத்தை முன்னிட்டு முன்வருவதைக் கடவுள் மன் பாராளுல், கடவுளின் விருப்பத்தை நீ ஐயம் கொள்ளக் கூடாது. குழு ஆள்: நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. சிமசோன்: துணிவாக இரு. சில அருஞ்செயல்களைச் செய்ய, உள்ளுணர்வு என்னைத் தூண்டுகிறதை நான் உணர் கிறேன் தூதைேடு, நான் கோயிற்குப் போவேன். எனக்கு இழிவு ஏற்படும் முறையிலோ அல்லது ஒரு நசரேயனின் உறுதி மொழிகளுக்கு இழிவு ஏற்படும் வகையிலோ நடந்து கொள்ள மாட்டேன். அடி மனத்தின் அறை கூவலுக்கு ஏதேனும் பொருளிருப்பின், இந்த நாள் சில மேன்மையான செயல் களால் குறிப்பிடத் தக்க நாளாகப் போகிறது. அல்லது இந் நாள் என் வாழ்வின் இறுதி நாளாகிவிடும். குழு ஆள்: நீ, தக்க நேரத்தில் முடிவெடுத்துள்ளாய். இதோ! தூதன் வருகிருன். அதிகாரி: சிம்சோனே, ஆண்டைகளிடமிருந்து இரண்டா வது செய்தியோடு வந்திருக்கிறேன். நீ, எங்கள் அடிமை, பிணையன், ஆலையில் பணிபுரியும் கூலிக்காரன். பின் எப்படி நீ பெலித்திய ஆண்டைகளின் கட்டளையை மீறமுடியும்? உன்னை உடனே அங்கு வரச்சொன்னர்கள்; எதிர்த்துப் பேச எத்துணைத் துணிச்சல்? உடனே வா. பாறையைவிட உறுதி யாய் இங்கேயே நீ அசையாமல் நின்ருலும், உன்னை அசைப்ப தற்கு எங்களிடத்தில வழிமுறைகள் உண்டு. சிம்சோன்: அவர்களின் கைகளில் அதிகத் தொல்லை அடைய நான் அணியமாகிவிட்டேன். இந்தப் பெருந்தொல்லை அவர்கள் சிலரின் அழிவுக்கு அடிப்படையாக அமையும். நான் உங்களோடு வரத் தீர்மானித்துவிட்டேன். ஏனெனில் அவர் களுக்கு என்னல் சில நலன்கள் உண்டு. நான் வருவதாக முடிவு செய்து விட்டேன். வரவில்லையானல், அவர்கள் தங்கள் வீதி வழியாக என்னை ஒரு காட்டு விலங்கைப்போல்