பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாமல்லன் சிம்சோன் விருந்தாலும் அதைப்பற்றி அறியும் ஆவலுடன் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். - மனுேவா: அந்த நேர்ச்சி பேரொலி எழுப்பிற்று. அது எங்கும் கேட்டது. உனது வருகைக்குமுன், நாங்கள் கேட்ட அந்த உணர்ச்சிக் கூக்குரல், ஏதோ எதிர்பாரா நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்பதை எங்களுக்கு அறிவுறுத்தியது. ஆனல் என்ன என்பதை நாங்கள் இன்னும் அறியோம். முன்னுரை தேவையில்லை. செய்தியை அறிய நாங்கள் ஆவலோடு இருக்கிருேம். துதன்: பேரழிவால் சிதறிப்போன என் சிந்தையைச் சீர்செய்யவும் என்னைச் சற்று நிலைப்படுத்திக்கொள்ளவும் விடுங்கள். அப்போதுதான் நான் சொல்வது இன்னதென்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். மனுேவா: முதல் தகவலைக் கொடு. விளக்கங்களைப் பின்னர் சொல். தூதன்: காசா அழியவில்லை. ஆனல் எல்லாப் பெலித் தியர்களும் தங்கள் முடிவைக் கண்டுவிட்டனர். நொடிப் பொழுதில் அனைவரும் மடிந்தனர். மனுேவா: இது இரக்கத்திற்குரியது. ஆனல் பகைவரின் பட்டணம் அழிந்ததால் இசுரவேலர்களுக்கு எதுவுமில்லை. துதன்: மாந்த இனத்தவர்க்காய் முதலில் துக்கப்படு. பெருந்துயரம் உனக்குக் காத்திருக்கிறது. மனுேவா: அழிவு யாரால் ஏற்பட்டது? துரதன்: சிம்சோல்ை. மனுேவா: இது என் துன்பத்தைக் குறைக்கிறது. துன்பம் மகிழ்ச்சியாய் மாறுகிறது. தூதன்: ஆ, மனேவா , செய்தியைச் சொல்லத் தயங்கு கிறேன். தீய செய்திகள் விரைந்து சொல்லப்படுமாயின் அது உன் மனத்தைப் பெரிதும் தாக்கும். உள்ளத்தை உடைக்கும். நீ ஏலவே முதுமை அடைந்துமிருக்கிருய்.