பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே என் ஆசிரியர்கள். என்னுடன் படித்துக் கல்லூரியில் பயின்ற உயர்நிலைப் பள்ளியின் ஒருசாலை மாளுக்கர்களும் என் ஆங்கில இலக்கியப் பயிற்சிக்கு உறுதுணையானர்கள். 1956-க்குப் பிறகு இருமொழி வல்லுநரான ம. இலெ. தங்கப்பாவின் உறவு, பாவேந்தரால் பண்பட்டுவந்த என்னை ஆங்கில இலக்கியத்தின்பால் மேலும் முனைப்பாக்கிற்று. அவருடைய தமிழாக்கங்களும் என்னே மேலும் உந்தித் தள்ளின; தமிழிலும் புதிய புதிய திருப்பங்கட்கு ஆளாக்கின. முறைமன்ற நடுவராகவும், உயர் அறமன்ற நீதியரசராக வும் விளங்கிய திரு. சு. மகராசன் அவர்களால் சேக்சுபியரை நன்கறிந்தேன். அவரின் ஆர்வந்தரும் நல்லுணர்ச்சியும்; பொதுவுடைமை இயக்கத்தோடிருந்த நெருக்கமும் என்னை ஆங்கிலவழி சோவியத்துப் பாட்டிலக்கியத்தில் ஈடுபடுத்தின. மொழிபெயர்ப்பின் பண்பும் பயனும் அறிந்த நான் உலகமொழிப் பாட்டிலக்கியங்களைக் கற்பதில் ஒரு தீராக் காதலனுகவே உள்ளேன். ஆங்கில இலக்கியத்தில் பலரையும் உலகறியச் செய்யும் எந்தப் பெயர்ப்பாளரும் தெய்வமாக்கவி’ மில்ட்டனை ஏன் தமிழில் அறிமுகப்படுத்தவில்லை என்று நெடுநாளாக எண்ணிய துண்டு. துறக்க நீக்கத்தில் கைவைத்த பலரும் தோல்வி கண்டிருப்பதை அறிந்தேன். ஒப்பிலக்கியக்காரர்களும் தப்பி யோடியிருப்பதைக் கண்டேன். எட்டு ஆண்டுகட்குமுன் நடைபாதையில் மாமல்லன் சிம்சோன்' ஆங்கிலப் பதிப்பு-உரையுடன் கிடைத்தது. உரையைப் படித்து மூலத்தைப் படித்ததும் மில்ட்டனின் நுணங்கு நுண்பனுவற் புலமை புரிந்தது. சங்கச் சான் ருேரின் அருமையும் ஆழமும்கொண்ட பாங்கு தெரிந்தது. பன்மொழிப் புலமையால் பெற்ற செஞ்சொல்லின்பக் காட்சி கொங்குவேளிரின் பல்லலங்காரப் பாங்கு நடையில் விரிந்தது. எனவே கருத்துாற்று மலையூற்ருய்ப் பொங்கிப் பொலியும் இக் காப்பிய நாடகத்தைத் தமிழில் தர முந்தினேன். B іх