பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மாமல்லன் சிம்சோன் களுக்கு இடையில் நிறுத்தினர். கடின உழைப்பால் களைப் படைந்திருந்த சிம்சோன் இரண்டு தூண்களையும் தொட்டுச் சாய்ந்தவண்ணம் தன்னைச் சற்று இளைப்பாற விடுமாறு தன் வழிகாட்டியைக் கேட்டுக்கொண்டான். இந்த இரண்டு துரண்கள்தாம் மண்டபத்தைத் தாங் கி நின்றன. வழி காட்டி இதில் ஏதும் தீங்கு இருப்பதாக நினைக்கவில்லை. எனவே வழிகாட்டி சிம்சோனைத் தூண்களுக்கு அருகில் கொண்டுவிட்டான். சிம்சோன் தன் கைகளால் துரண்களைத் தொட்டுப் பார்த்தபோது ஒரு பக்கமாகத்தான் தலையைச் சாய்த்தான். பின்னர் இறைவனைத் தொழுவதுபோல் உறுதி யான எண்ணத்துடன் நின்ருன். பின் தலைநிமிர்ந்து இது வரை ஒ! பெலித்திய ஆண்டைகளே, நீங்கள் கட்டளையிட்ட படி செயல்களைச் செய்தேன். அனைத்துச் செயல்களையும் வியந்து ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கண்டீர்கள். இப்போது, என் விருப்பம்போல், என் உடல் வலிமைக்கு எடுத்துக்காட்டாய் மற்ருெரு செயலை உங்கள் விழிகளுக்கு விருந்தாய்ப் படைக்கப்போகிறேன்’ என்று சொல்லிய வண்ணம் தன் வலிமையெல்லாம் ஒன்றுதிரட்டிப் பெருங் கடலாலும், பேய்க் காற்ருலும் நடுங்கும் மலைபோல், குனிந்து, அச்சந்தரும் முறையில் அந்த இரு மாபெரும் தூண்களையும் அசைத்தான். தூண்கள் வீழ்ந்தன. தொடர்ந்து வரிசை வரிசையாய்க் களிப்பில் அமர்ந்திருந்த பெலித்திய ஆண்டை கள்மீதும், பெண்கள்மீதும், சுற்றத்தார்மீதும், சமயக் கணக் கர்மீதும் அரங்கம் இடிந்து விழுந்தது. இந் நகர மக்கள் மட்டு மல்லர், பெலித்தியர்களின் பிற பட்டணங்களிலிருந்தும் வேடிக்கை பார்க்கக் குழுமியவர்கள் அனைவரும் மடிந்தனர். அவர்கள் இடையிலே நின்றுகொண்டிருந்த சிம்சோனும் அந்த முடிவைத் தவிாக்கமுடியவில்லை. அரங்கிற்கு வெளியே நின்ற மக்கள் மட்டுமே தப்பினர். குழு ஆள்: இறுதியில் சிம்சோன் பழிதீர்த்துக் கொண் டான். பெரு விலைகொடுத்து அதைச் செய்துள்ளான். ஆனலும் அவன் செயல் புகழுக்குரியது. தன் வாழ்வை சத்து வந்த இசுரவேலர்களுக்கு விடு த லை அளித்துள்ளான்.