பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் JᎥ11f இருந்தும், இறந்தும் அவன் தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டான். தூதனின் முன்னறிவிப்பினை மெய்ப். பித்துவிட்டான். அவனது இறப்பு அவன் வலிந்து பெற்ற தில்லை. தானகவே தேவையின் விழைவாயிற்று. ஏனெனில் அவளுல் அழிக்கப்படவேண்டிய பெலித்தியர்கள் இடையில் நின்ருன். உயிரோடு அவன் இருந்தபோது கொன்ற பெலித் தியர்களைவிட, அவன் சாவில் அவளுல் கொல்லப்பட்டோர் ஏராளம். (குழு நண்பர்கள் இப்போது இரண்டாகப் பிரிந்து, ஒரு பிரி வினர் முன்னும், மற்றவர்கள் அவர்கள் பின்னும் சென்ற னர்.) முதல் அணி: பெலித்தியர்கள் குடித்தும் வெறித்தும். இருந்தபோது, அளவுக்கதிகமாக உண்டு, மகிழ்ச்சியாக இருந்தபோது, வருணனுக்கு அவர்கள் புகழ்பாடிக் கொண் டிருந்தபோது உள்ளம் களிப்பால் நிரம்பி வழிந்தபோது, சிம்சோன் அவர்களுக்கு அழிவைக் கொண்டு வந்தான். குடி வெறி .ெ கா ண் ட பெலித்தியர்களிடையே இறைவன் பிததுள்ள ஆவிகளை உலவ விட்டுவிட்ட ன். எனவேதான் அவர்கள் தங்கள் பித்தில்ை தங்கள் காலகை உண்டாக்கப் பட்ட சிம்சோனைத் தங்கள் இடையில் அழைத்து வேடிக்கை காட்டக் கட்டளையிட்டனர். அவர்கள் தங்கள் கேளிக்கைப் பொருளாகச் சிம்சோனே அழைத்தனர். அது அவர்கள் தங்கள் அழிவையே அறியாமல் அழைத்ததுபோல் ஆகி விட்டது. கடவுளின் சினம் யார்மீது விழுகிறதோ அவர்கள் முட்டாள்களாக மாறித் தங்கள் அழிவைத் தாங்களே வலிந்து அழைத்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள், தங்களின் உணர்வை, அறிவை இழந்துவிடுகின்ற னர். இரண்டாம் அணி: சிம்சோன் குருடன் என்று எல்லோ ராலும் புறக்கணிக்கப்பட்டான். ஆற்றலிழந்தவய்ை அனைவ ராலும் கருதப்பட்டான். ஆனாலும், காசா மண்டபத்திலே, சாம்பரின் ஊடே கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு, காற்றுப். பட்டவுடன் குப்பென்று பற்றி எரிவதுபோல், ஏதோ ஒர்