பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 113 தார்கள். ஆனல் அப்படி இல்லை என்பதை இப்போது அவர் கள் உணர்வர். கடவுள் அவனுக்கு இறுதிவரை துணைநின்று உதவியிருக்கிரு.ர். இனி அழுவதற்கோ, துன்பப்படவோ ஏது மில்லை. அவனுடைய செயல்களில் குறைபாடுடையவையோ வெறுப்புக்குரியவையோ எ ைவ யு மி ல் லை. அவனுடைய செயல்களில் இழிவுக்குரியவைபோக பழிக்குரியவையோ எவையுமில்லை. அவன் எதைச் செய்தாலும், செம்மையாகச் செய்தான். நல் நோக்கத்திற்காய்ச் செய்தான். இதைவிடச் சிறந்த இறப்பு வேறு எதுவுமில்லை. எனவே அவன் மறைவுக் காய் நாம் வருந்தத் தேவையில்லை. மாருக மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்வோம். நாம் .ெ ச ன் று அவனது பெலித்தியர்களின் குருதிக் கறைபடிந்த உடலைக் காண் போம். ஏனங்களில் ஓடைகளிலிருந்து புனித நீர் கொண்டு வந்து அக் கறைகளைக் கழுவுவோம். இதனிடையே என் இனப் பிறப்புகள் அனைவரையும் அவன் உடலை எடுக்க எவ்வளவு விரைவாக அழைக்கமுடியுமோ அவ்வளவு விரை வாக அழைத்து வருகிறேன். நம்மைத் தடுக்கும் நிலையில் நம் எதிரிகள் இல்லை. அமைதியாகத் துயருடை உடுத்து இறுதி ஊர்வலத்துக்கு அணியமாவோம். சிம்சோனின் உடலை அவன் இல்லத்திற்கு எடுத்துச்செல்வோம். அங்கே அவ னுக்கு நான் ஒரு நினைவுச்சின்னம் எழுப்புவேன். அதைச்சுற்றி என்றும் வாடாத பசுமையான மணம் கமழும் பூச்செடிகளை நட்டுவைப்பேன். அவ ன து கல்லறையில் அவன் புகழ் பரப்பும் வண்ணம் அவன் வென்ற வெற்றிச் சின்னங்களை வைப்பேன். இனிய பாக்களில் அவன் புகழைக் கல்லில் பொறித்துவைப்பேன். பார்க்கின்ற வருங்கால மரபினர், அவனது வீர நினைவுகளால், ஈடு இணையற்ற செயல்களால் புதிய உந்தாற்றல் அடைவர். கற்புள்ள கன்னியர்கள் நல்ல தாள்களில் அவன் கல்லறைக்குச் சென்று மலர்வளையம் வைத்து வணங்குவர். அவர்கள் சிம்சோனின் தவருண முறை யில் வாழ்க்கைத் துணைவியர்களைத் தேர்ந்தெடுத்த ஒன்றிற் காக மட்டுமே கண்ணிர் சிந்துவர். அந்தத் தவறே அவனது பார்வையின்மைக்கும், அடிமைக்கும் காரணம் என எண்ணிக் கலங்குவர். 5