பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - மாமல்லன் சிம்சோன் ஆழமும் பொருட்செறிவும் வினையாண்மையும் அகலமும் உள்ளன. இவர் எழுதிய ஒவ்வொரு வரியும் உணர்ச்சி வேகத்தில் உருவாக்கப் பெற்றுப் பின் அறிவாற்றல் கொண்டு நன்கு திருத்தமும் நயமும் பெற்று விளங்குவது. எனவே சேக்சுபியர் நூல்களில் காணப்படும் சிறு பிழைகளும், மட்ட உரைப்பகுதிகளும் இவரது கவிதையில் கிடையா. இவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் அவற்றின் துறை யில் ஆங்கில இலக்கிய உலகில் ஒப்புயர்வற்று விளங்குபவை ஆகும். நாடக உலகில் கூட சேக்சுபியர் முயற்சிக்குப் புறம் பான ஓர் துறையில் இவர் எழுதியதனால் அதுவும் ஒப்புயர் வற்றதாகவே விளங்குகிறது. சான் மில்ட்டனின் தந்தையாரும் சான் மில்ட்டன் என்ற பெயரையே உடையவர். இவர் பத்திர எழுத் தாளராயிருந்தார். இளமையிலேயே இவர் தம் தத்தை யுடன் சமய வேறுபாட்டால் பிரிந்து தம் முயற்சியினல் தனிப் பட வாழ்ந்தவர். கொஞ்ச நாட்களுக்குள்ளாக இவர் கையில் சற்றுப் பொருள் ஏற்பட்டது. அதனையும் தொழிலில் ஈடுபடுத்தித் தம் கட்சிக்காரருக்கு அவ்வப்போது வட்டிக்குக் கடன் கொடுத்தும் வந்தார். இவருக்குத் தம் தொழிலைவிட நூல்களில்தான் ஆர்வம் மிகுதி. பாட்டுக்கள் எழுதுவதிலும் அப்படியே. உழைப்பின் கடுமையை நன்கறிந்தவராதலால் தம் பிள்ளை புலவராயிருக்க வேண்டும் என்று இவர் மிகுந்த முன் கருதலுடையவராயிருந்து வந்தார். ஆனல் அவர்கடிடத் தம் மகனர் உலகின் முதற் பெரும் புலவர் வரிசையுள் ஒருவர் ஆவார் என்று நினைத்திருக்கமாட்டார். கவிஞர் சான் மில்ட்டன் 1608 திசம்பர் 9இல் பிறந்த வர். வல்லுநர் சான் காலெட்டு என்பவரால் நிறுவப்பெற்ற செயின்ட் பால் பள்ளிக்கூடத்தில் இவர் பயின்ருர். அதன் தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் கில் என்பவர் திறமை மிக்க ஆசிரியரேயாயினும், அத் திறமையால் அடைந்த புகழைப் போலவே பிரம்படிக்கும் புகழ் வாங்கியவர். சான் இத்தகையரது பள்ளியில் நன்கு உழைத்திருக்க வேண்டு மென்பதில் ஐயமில்லை. ஆனல் அது போதாமல் வீட்டிலும்