பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு 7. யது. கிரேக்க நாட்டின் பழந்தலைநகரான அதேன்சின் நாட்டாண்மை மன்றமாகிய அரியோப்பகசின் பெயரடியாக வந்தது இப் பெயர். இதன் கொள்கை மிக உயரியது. நடை முறையில் இன்றும் அருமையாய்ப் பேரிலக்காய் நிற்கத் தக்கது. நிலமாதுக்குப் பொறையாக வாழ்வோர் எத் தனையோ பேர் உளர்; ஆசிரியர் அத்தகையர் அல்லர். அவர் களுடைய வாழ்க்கையின் முதிர்ந்த மணிகளே நல் நூல்கள் ஆகும். உலக வாழ்வின் மிக்கதோர் பெருவாழ்விற்குரிய திறவு கோல்கள் ஆகும் தகுதியுடையவை அவை என்பது போன்ற பல அரிய நல்லுரைகள் இதில் அடங்கியுள்ளன. இதற்கொப் பான இன்னேர் உரைநடை நூல் கல்வியின் உரிமைபற்றிய தாகும். இது தம் புதல்வியர்க்கு அவர் கல்வி கற்பிக்கும் போது எழுந்த நினைவுகளாம். இந் நூல்களின் உரைநடை மிகவும் செழுமையும் நயமும் உடையது. ஆயினும் அடிக்கடி அது கடுமை என்னும் ஒரு வழுவிற்கு மட்டும் ஆளாயிருந்தது. மில்ட்டன் இந் நூல்களே அரசியல், வாழ்வியல் பணிகளுக்காகச் செய்தனரேயன்றி நூல்கள் என்ற இலக்கிய நோக்கால் எழுதவில்லை. இதையே அவரும் எனது வலக்கை கவிதைக்கும் இறைவன் புகழுக்கும் மட்டுமே உரியதாகலின், இந் நூல்களில என் இடக்கையின் ஆற்றலையே காணலாகும் எனக் கூறினர். இங்ங்ணம் வலக்கை வாளா இருந்த காலத்தில் அது வளராது அங்ங்னமே இருந்துவிடவில்லை. முன்னம் அவர் கவிதையில் எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் காணப் படும் மென்மையும், நயமும் மட்டுமே தலைசிறந்திருந்தன. அரசியல். வாழ்வியல் முதலிய வினைத்துறைகளிலீடுபட்டு உலக மக்களுடைய உள்ள நிலைகள், எண்ணப் போக்குகள் ஆகியவற்றில் தோய்ந்து அவற்றின் உள்ளுறை நுட்பங்களை யும் பொருள் திட்பங்களையும் அறிந்தபின்தான் மில்ட்டன் கவிதை ஒமர், கம்பர், காளிதாசர், தந்தே முதலியவர் களின் கவிதைகளுக்கொப்பாக மென்மையும், உரமும், சொல் நயமும், பொருள் நயமும் செறிந்து விளங்கலாயிற்று.