பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மாமல்லன் சிம்சோன் Either man’s work or His own gifts; who best Bear his mild yoke, they serve Him best; His state Is kingly; thousands at His bidding speed And post o’er land and ocean without rest;– They also serve who only stand and wait’ 5. துறக்க வீழ்ச்சியின் மாட்சி மில்ட்டனது மிகச் சிறந்த இலக்கியப்பணி அவரது துறக்க வீழ்ச்சி (Paradise Lost) ஆகும். அவரது பள்ளி வாழ்க்கைநாள் முதற்கொண்டே இத்தகையதோர் பெரும் பணிக்கே தம் வாழ்நாள் முழுமையையும் ஈடுபடுத்த வேண்டுமென்று அவர் உறுதிகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் அத்தகைய பணிக்கு அவர் எடுத்துக்கொண்ட முதற்பொருள் ஆர்தரும் அவரது நூறு மெய்வீரரும் என்ற ப ைழ ய ஆங்கிலநாட்டுக் கதைத் தொகுதியாகும். மில்ட்டன் இதனை எழுதாது விட்டனர். நெடுநாள் பின்னர் 19ஆம் நூற்ருண்டில் விக்டோரியாப் பேர் அரசியாரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த கவிஞர் தெனிசன் இதே பொருள்மேல் மில்ட்டன் எழுதிய துறக்க வீழ்ச்சி, துறக்க மீட்சி ஆகியவற்றைப் பின்பற்றி ஆர்தர் Qaraaj (Passing of Arthur), -off off sugaj (Coming of Arthur) என இரு காப்பியங்கள் இயற்றிஞர். இவற்றுட் சில பகுதிகள் சிறந்த கவிதைகளே. ஆயினும் பெருங் காப்பியம் எழுதும் வகையில் மில்ட்டன் ஒருவருக்கன்றி ஆங்கிலக் கவிஞர் எவர்க்கும் வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். துறக்க வீழ்ச்சியின் கதை விவிலிய நூலில் கூறப்பட்ட மனிதனின் வீழ்ச்சிக் கதையே ஆகும். இறைவன் இயற்றிய துறக்கம் அல்லது பொன்னுலகில் முதல் மனிதன் ஆதமும், முதல் மாது ஏவாளும் வாழ்ந்ததும், இறைவனணேeறிய இறைவனின் பகைவனகிய சைத்தானது உரைக்கிணங்கி அறிவு மரத்தின் கனியை அவர்கள் உண்டதும், அதன்